ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 6-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
7-ம் நிலை வீரரான கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம், 46-ம்...
“இந்தியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றி பெருமை அளிக்கிறது” – நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல்
admin - 0
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது பெருமை அளிப்பதாக நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கடைசி ஆட்டம் நேற்று முன்தினம் இந்தூரில் நடைபெற்றது. இதில் 338 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது....
இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து நாளைக்குள் (ஜனவரி 21) வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு எடுக்க வேண்டும் இல்லையென்றால் வேறு அணி சேர்க்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த வாரம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் ஆட்டங்கள் லாகூரில் வரும் 29, 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்தத் தொடருக்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் முன்னணி வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட்,...
ஆப்பிரிக்கா கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் நேற்று மொராக்கோ - செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் மொராக்கோவின் ரபாத் நகரில் உள்ள பிரின்ஸ் மவுலே அப்தெல்லா மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை காண்பதற்காக மைதானத்தில் சுமார் 70 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து காயங்களுக்கு இழப்பீடாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன்...
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இத்தாலி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டியில் முதல் முறையாக விளையாட இருக்கும் இத்தாலி அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜே.ஜே.ஸ்மட்ஸ் இடம்பெற்றுள்ள...
ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் அடுத்த சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் நேற்று தொடங்கியது. வரும் பிப்ரவரி 1-ம் தேதி வரை இப்போட்டி நடைபெற உள்ளது.
நேற்று நடைபெற்ற மகளிர் முதல் சுற்றுப் போட்டியில்...
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தின் விஜ் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நேற்று தொடங்கியது. முதல் சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை எதிர்த்து அர்ஜுன் எரிகைசி விளையாடினார். 32-வது நகர்த்தலில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் உலக சாம்பியனும், இந்திய கிராண்ட்மாஸ்டருமான டி.குகேஷும், உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர்...
இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து வீரர்கள் டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதம் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். மேலும் ஒருநாள் தொடரையும் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் தொடர், 5 சர்வதேச டி20...
நேற்றைய போட்டியில் 137 ரன்கள் விளாசியதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக 4-வது ஒருநாள் போட்டி சதத்தை டேரில் மிட்செல் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் கடந்த 4 போட்டிகளில் அவர் விளாசும் 3-வது சதமாகும் இது. ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் அவர் எடுக்கும் 9-வது சதமாகும் இது.
இந்திய மைதானங்களில் இந்தியாவுக்கு எதிராக 7 போட்டிகளில் விளையாடியுள்ள டேரில் மிட்செல் 4 சதங்களை எடுத்துள்ளார். இந்த வரிசையில் தென் ஆப்பிரிக்க...
