Google search engine
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்களில் வென்றுள்ளது இந்தியா. இந்நிலையில், இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது. “இந்த வெற்றி எங்களுக்கு மன நிறைவை தருகிறது. இதற்காக நாங்கள் அணியாக இணைந்து கடும் உழைப்பை செலுத்தினோம். இதில் அனைவரின் பங்கும் உள்ளது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் கள சூழலுக்கு ஏற்ப ஆடி வருகிறோம்....
தருவ்பாவில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு கிரீன் டாப் பிட்ச் அனுபவமற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு அப்படிப்பட்ட ஒரு பவுலிங் பிட்சைப்போட்டு ஐசிசி அந்த அணியைக் காலி செய்துள்ளது என்றுதான் கூற வேண்டியுள்ளது. மொத்தப் போட்டியுமே 20 ஒவர்கள்தான் தாங்கியது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற டாப் அணிகள் தகுதி பெறாமல் போன நிலையில் ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகளை கடினமாக ஆடி...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட்டில் இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56...
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள கயானாவில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் மோதுகிறது. இரு அணிகளும் கடைசியாக டி 20 உலகக் கோப்பையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடரின் அரை இறுதி போட்டியில் மோதி இருந்தன. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் 169...
ஜெர்மனியின் கெல்சென்கிர்ச்சனில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ‘குரூப் - எஃப்’ போட்டி ஒன்றில் போர்ச்சுகல் அணியை ஜார்ஜியா 2-0 என்று வீழ்த்தி, தொடரின் மிகப்பெரிய அதிர்ச்சி வெற்றியைப் பெற்று ‘ரவுண்ட் ஆஃப் 16’ சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் ஜார்ஜியா அணிக்காக முதல் கோலை 2-வது நிமிடத்திலேயே அடித்த கவாரட்ஸ்ஹேலியா, போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கால்பந்தாட்டத்தை வழிபாடு செய்து வளர்ந்த ஒரு...
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலி அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இத்தாலி - குரோஷியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 54-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் லூகா மோட்ரிச் அடித்த ஷாட்டை இத்தாலி கோல்...
ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று கிங்ஸ்டனில் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 55 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ‘சூப்பர் 8’ சுற்றோடு வெளியேறி உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இந்த தொடர் தான் தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர் என தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் உடன் தான் எடுத்துக் கொண்ட...
சூப்பர் -8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ளன. இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிக்குச் செல்லும். தற்போது இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியின் நிகர ரன் விகிதம் 2.425-ஆக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு...
நடப்பு யூரோ கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவு ஆட்டத்தில் ஹங்கேரியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி. இதன் மூலம் இந்த தொடரில் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாகி உள்ளது ஜெர்மனி. ஸ்டட்கார்ட் அரேனாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடியது ஜெர்மனி. எதிரணி வீரர்கள் வசமிருந்து பந்தை தட்டிப்பறித்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர் ஜெர்மனி...