ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக ராஜஸ்தான்...
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இந்த ஆட்டம் 77-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. கால் இறுதி போட்டி இரண்டு கட்டமாக நடைபெறும். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு முறை பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
நார்வே வீரரான...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகி உள்ளதால் எம்.எஸ்.தோனி தலைமையில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி,...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டனான வெங்கடேஷ் ஐயர் கூறும்போது, “சேப்பாக்கம் ஆடுகளத்தில் அதிக அளவிலான சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இந்த சீசனிலும் சரி, கடந்த சீசனிலும் சரி வேகப்பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்கள் கைப்பற்றி உள்ளனர். கடந்த சீசன் இறுதிப் போட்டியில் முதல் 5 விக்கெட்களை வேகப்பந்து வீச்சாளர்கள்தான் கைப்பற்றினர்.
ஆடுகளம் எந்த வகையில் சாதகமாக இருக்கிறது என்பது குறித்து நாங்கள்...
சென்னை அடுத்த கவரப் பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஆர்எம்கே பொறியியல் மற்றும் டெக்னாலஜி கல்லூரி அணி, சாய்ராம் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் முதலில் பேட் செய்த சாய்ராம் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது....
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 128 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்குக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில், போட்டி அமைப்பாளர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் 6 அணிகள் மட்டுமே கலந்து கொள்ளும் என உறுதி செய்துள்ளனர்.
ஆடவர் பிரிவில் 6 அணிகளும், மகளிர் பிரிவில் 6 அணிகளும் கிரிக்கெட்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி,...
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கூறும்போது, “பேட்டிங்கில் ஆணவம் இருக்கக் கூடாது. யாரையும் நாம் அதிகமாக மறைக்க செய்யவும் முயற்சிக்கக் கூடாது. எப்போதும் போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து விளையாட வேண்டும். நான் சூழ்நிலைக்கு தகுந்தவாறுதான் விளையாடுவேன். இந்த விஷயத்தில் நானே என்னைப் பெருமையாக நினைப்பேன்.
நான் பேட்டிங்கில் நல்ல ரிதமில் இருந்தால் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்வேன். வேறு யாராவது நல்ல ரிதமில் விளையாடினால் அவர்கள்...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில், 103 ரன்கள் விளாசினார். இறுதிக்கட்டத்தில் ஷஷாங் சிங் 36 பந்துகளில், 52 ரன்கள் விளாசி அசத்தினார்.
220 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே...
தெற்காசிய கூடைப்பந்து சங்கம சாா்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் சபா கிளப் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. தமிழகம், பூடான், இலங்கை, நேபாளம், மாலத்தீவு ஆகிய 5 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றன.
இதில் தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 106-49 என்ற புள்ளிக் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. பரிசளிப்பு விழாவில் இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர்...









