இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கேப்டன்களான கோலியும், ரோஹித்தும் ‘கிரேடு-B’யில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தனர். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகின்றனர்.
ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ புதுப்பிக்கும். அந்த வகையில் 2025...
நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி திட்டமிட்டபடி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி, போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பைத் தொடரில், 'குரூப் ஏ'...
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து, அறிமுக அணியான இத்தாலியுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 4 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. தனது 14-வது அரை சதத்தை அடித்த தொடக்க வீரரான ஜார்ஜ் முன்சே 54 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார்.
மற்றொரு...
டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடர் சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது.
இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில்...
T20 WC 2026: சேப்பாக்கத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதல்: 2-வது வெற்றியை பெறும் முனைப்பில் நியூஸிலாந்து
admin - 0
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 183 ரன்கள் இலக்கை துரத்திய...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் காலை 11 மணிக்கு சென்னைசேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 1-4 என இழந்த நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்குகிறது. டாப் ஆர்டரில் டிம்...
‘கடவுள் எழுதியது நடக்கும்’ – இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து சிராஜ் சிலாகிப்பு | T20 WC 2026
admin - 0
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் கடைசி நேரத்தில் இடம்பெற்றது குறித்து வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் கடவுள் எழுதியது நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடரில் சனிக்கிழமை அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக நடப்பு சாம்பியனான இந்தியா விளையாடியது. இது இந்த தொடரில் இந்திய அணிக்கு முதல் ஆட்டமாக அமைந்தது. 162 ரன்கள் விரட்டிய...
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காணச்சென்ற கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து ‘விசில்’ பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. தவெக சின்னம் என்பதால் விசிலுக்கு காவல்துறை தடைவிதித்துள்ளதா என்பன போன்ற கேள்வி எழுந்துள்ளன.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போதுநடந்து வருகிறது இதன் ஒருபகுதியாக நேற்று சென்னைசேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நியூஸிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சுமார் 21...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து அணி.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது.
6-வது...
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள 2 முறை சாம்பியனான இங்கிலாந்து, கத்துக்குட்டியான நேபாளத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் கேப்டன் ஹாரி புரூக் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள்,...
