Google search engine
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் உள்ளிட்டோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். மெர்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக்...
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று (21.01.2025) இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணிகள் மோதுகின்றன. மெரினா மச்சான்ஸ் என அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி அணி 16 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 டிரா, 7 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் மோகன் பகான் சூப்பர்...
 ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வரும் மார்ச் 21-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதை லக்னோ அணி நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் ரிஷப் பந்த்தை, லக்னோ அணி ரூ.27 கோடிக்கு வாங்கியிருந்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட...
சென்னையின் எஃப்சி, நார்விச் சிட்டி எஃப்சியுடன் இணைந்து, தமிழ்நாட்டில் அடிமட்ட அளவில் கால்பந்தை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக சிஎஃப்சி-என்சிஎஃப்சி பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. இந்தத் தொடர் சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில் வரும் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பிப்ரவரி 3-வது வாரம் வரை நடைபெறும் இந்தத் தொடரில் 12 வயதுக்குட்பட்ட மற்றும் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில், 64 அணிகள்...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி ஜம்மு & காஷ்மீர் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் மும்பையில் உள்ள எம்சிஏ-பிகேசி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக அஜிங்க்ய ரஹானே தொடர்கிறார். சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலிய...
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. விளையாட்டுத் துறையில் இந்தியாவை உலக அளவில் பெருமைப்படுத்தியவா்கள், துறை சாா்ந்து சிறப்பாகச் செயல்படுபவா்களுக்கு ஆண்டுதோறும் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சாா்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான விருது வென்றவா்கள் பட்டியலை விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த...
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 33-ம் நிலை வீரரான போர்ச்சுகல் வீரர் நூனோ போர்கெஸுடன் மோதினார். 2 மணி நேரம் 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 6-2, 6-4,...
பொங்கல் விழாவை சென்னையின் எஃப்சி (கால்பந்து கிளப்) அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதில் கிளப் அணிக்காக விளையாடும் சீனியர் மற்றும் ஜூனியர் அணி வீரர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். இதில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உறியடி, கயிறு இழுக்கும் போட்டியிலும் கிளப் வீரர்கள் களமாடி அசத்தினர். வீரர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையின் எஃப்சி அணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தான் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெருவிரல் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்க்கியா, இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் மீண்டுள்ள லுங்கி நிகிடி ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். அதேவேளையில் ஜெரால்டு கோட்ஸி, நந்த்ரே பர்கர் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை....