மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
admin - 0
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 20 வகையான அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமைத் தொடங்கிவைத்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன்...
இந்துக்கள் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம்
admin - 0
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து முன்னணி நிர்வாகி கிஷோர்குமார் இவற்றை வாசித்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அறநிலையத் துறை கார்த்திகை...
“மனநிறைவு இல்லை என்றாலும் மக்களுக்காக கூட்டணியில் தொடர்கிறோம்!” – தடதடக்கும் தவாக தலைவர் வேல்முருகன் நேர்காணல்
admin - 0
தவெக தலைவர் நடிகர் விஜய் மாணவிகளுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரத்தில் தவெக-வினருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கும் இடையில் வெடித்த மோதல் இன்னும் நின்றபாடில்லை. மேடை கண்ட இடமெங்கும் தவெக-வினருக்கு எதிராக தகித்துக் கொண்டிருக்கிறார் வேல்முருகன். பதிலுக்கு தவெக தம்பிகளும் சமூகவலைதளங்களில் அவரை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக வேல்முருகனிடம் பேசினோம்.
உங்களுடைய தாய்க் கட்சியான பாமக-வில் நடக்கும் தந்தை...
மூத்த குடிமக்களுக்கு 6 மாதங்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகளுக்கு வழங்குதல் ஆகிய பணிகள் இன்று (ஜூன் 21) முதல் ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அடையாறு, வியாசர்பாடி, ஆலந்தூர், அயனாவரம் உள்ளிட்ட 40 பணிமனை பேருந்து நிலையங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர், வழக்கம்போல் அந்தந்த பணிமனை...
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம்: இன்று மாலை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
admin - 0
சென்னையில் ரூ.80 கோடியில் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். அங்கு முதல் நிகழ்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்துக்கு வந்தார். வளாகத்தின் முன்பு நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர், உள்ளே சென்று பார்வையிட்டார். முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில்...
கோரிக்கைகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்களைக் கைது செய்ததற்கு, மருத்துவர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை...
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குறித்து அவதூறு கார்ட்டூன்: திமுக ஐ.டி. பிரிவு மீது அதிமுக தரப்பு புகார்
admin - 0
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறு கார்ட்டூன் வெளியிட்ட விவகாரத்தில் திமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கீழடி அகழாய்வு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமியை மையப்படுத்தி அவரது கார்ட்டூன் சமூக வலைதளத்தில் அண்மையில் வைரலானது. இந்த கார்ட்டூனை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஐடி விங்)...
சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு 70 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மதுரைக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் திடீரென்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். விமானத்தை சென்னைக்கு திருப்பி கொண்டு வருமாறு...
ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்கு பதிய வேண்டும்: லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு
admin - 0
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குப் பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்குப் பதிய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
தமிழகத்தில் 8,790 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு 5 விதமான பதிவேடுகள் கொள்முதல் செய்ததில், கடந்த 2019-ல் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. இதுகுறித்து...
பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள் உட்பட அனைத்து விதமான தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் என்று பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள், சுகாதார அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள், தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், முதியோர் - குழந்தைகள் காப்பகங்கள், மகளிர்...




