Google search engine
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்கியதுடன், 600 கிலோ மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்களைப் பறித்து சென்றனர். நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட படகுகளில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்கரை அருகே நேற்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது செந்தில் என்பவருக்கு சொந்தமான படகை சுற்றி வளைத்த இலங்கை கடல் கொள்ளையர்கள், படகிலிருந்த 5 மீனவர்கள் மீது கற்களை...
அமித் ஷாவை அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியின் அதிகார மமதையில், இந்து கடவுள்களையும், இந்து மதத்தையும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கொச்சையாகப் பேசி வருகிறார். சமீபத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், திமுகவினர் திருநீறு உள்பட...
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் அரசு மாதிரிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அழுகிய முட்டைகளும், தரமற்ற உணவும் வழங்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும் திகழ வேண்டிய அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமற்ற உணவை...
திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், அதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் மற்றும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக இருவழிச் சாலை, 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்நிலையில், அதற்கு தேவையான சவ்வூடு மணல், திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது....
சங்கரன்கோவிலில் திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அதிமுக-வுடன் அலையன்ஸ் போட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அறிவாலயத்தை அதிரவைத்திருக்கிறார்கள். 30 வார்​டு​களை கொண்ட சங்​கரன்​கோ​வில் நகராட்​சி​யில் 9 வார்​டு​களில் திமுக வென்​றது. 12 வார்​டு​களை அதி​முக கைப்​பற்​றியது. இருந்தபோதும் கூட்​டணி கட்​சி​களின் தயவில் நகராட்சி தலை​வர் பதவியை அதிர்​ஷ்டக் குலுக்​களில் கைப்​பற்​றியது திமுக. தென்​காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்​பாளர் சரவணனின் மனைவி...
“நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன்” கடந்த 18-ம் தேதி திருச்செங்கோட்டில் நடைபெற்ற திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி இப்படி பேசியதை வைத்து நாமக்கல் திமுக வட்டாரத்தில் பெரும் விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.​நாமக்​கல் மாவட்ட திமுக கிழக்​கு, மேற்கு என இரண்​டாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இரண்டு மாவட்​டங்​களி​லும் வரும் 6 தொகு​தி​களை​யும் வென்​றெடுக்​கும் பொறுப்​பில் இருக்​கும் செந்​தில்​பாலாஜி, மேற்கு...
தீவிரவா​தி​களின் ஊடுரு​வலை முறியடிக்​கும் வகை​யில், தமிழக கடலோர மாவட்​டங்​களில் சாகர் கவாச் என்ற பெயரில் தொட்​கிய 36 மணி நேர பாது​காப்பு ஒத்​தி​கை, இன்று மாலை​யில் நிறைவடைகிறது. தமிழகத்​தில் உள்ள 14 கடலோர மாவட்​டங்​களில் காவல்​துறை​யின் சார்​பில் சாகர் கவாச் பாது​காப்பு ஒத்​திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்​கியது. இதில், தமிழக கடலோர பாது​காப்பு குழு​மம், ஆயுதப்​படை, தமிழ்​நாடு சிறப்​புக் காவல் படை, கடலோர காவல் படை, குற்​றப்...
போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் துறை அதிகாரிகளுக்கு ‘தமிழக முதல்வரின் காவல் பதக்கம்’ கடந்த 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பதக்கங்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 15 ஆக...
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உள்பட 4 மருத்துவமனைகளில் புற்றுநோய் பரவலை கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார் வெளியிட்ட அரசாணை: கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை அண்ணா புற்றுநோய் மையத்திலும் ‘பெட் ஸ்கேன்’ வசதி அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் முடியாது: இந்நிலையில், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை,...
‘தைலாபுரத்​தில் நடை​பெறுகிற கூட்​டங்​களுக்கு வருகை தராத நிர்வாகிகளுக்கு, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு வழங்கப்படாது’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். பாமக மாவட்​டச் செய​லா​ளர்​கள், தலை​வர்​கள் மற்​றும் மாநில நிர்​வாகி​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டம் தைலாபுரத்தில் நேற்று நடை​பெற்​றது. நிறு​வனர் ராம​தாஸ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செய​லா​ளர் முரளிசங்​கர், அரசி​யல் ஆலோசனைக் குழு தலை​வர் தீரன், மாநிலச் செய​லா​ளர் அன்​பழகன், பொருளாளர் சையத் மன்​சூர் உசேன், சேலம்...