அஜித்குமார் விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல்: பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு
admin - 0
தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரிடம், நகை திருட்டு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன்குமார் ஆகியோரை போலீஸார் தாக்கியுள்ளனர். பின்னர் நவீன்குமாரை விட்டுவிட்டு, அஜித்குமாரை...
தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்புவனம் அஜித்குமார் உயிரிழப்பில் பெரும் மர்மம் இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி யார்? முழுமையான விசாரணை மூலம் இந்த மர்மங்களுக்கு விடைகாண வேண்டும்.மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆசிரியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தமாகா மற்றும்...
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரம்: மேட்டுப்பாளையத்தில் இன்று பழனிசாமி தொடக்கம்
admin - 0
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி ரோடு ஷோ நடத்தும் அவர் பல்வேறு இடங்களில் மக்களிடம் பேசுகிறார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை இன்று தொடங்குகிறார். காலை 9 மணிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டியில்...
ஏழை மாணவர் விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
admin - 0
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான் திராவிட இயக்கத்தின் தோற்றத்துக்கு அடிப்படையான கருதுகோள்கள்! இத்தகைய சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியைத்தான் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்ற...
சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று காலை 10.10 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 65 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 70 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் ஓட தொடங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து, விமானத்தை ஓடுபாதையில் நிறுத்திய விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்....
சென்னை அரசியலில் இருந்து மீண்டும் விருதுநகர் மாவட்ட அரசியலுக்கு திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாகவே எதிர்த்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், அண்மையில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின்முறை மாநாட்டில் கலந்து கொண்ட மாஃபா பாண்டியராஜன், “நாடார் சமுதாய மக்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்காமல் மற்றவர்களுக்கு வாக்களிப்பதால் அரசியலில் நாடார் சமுதாயம் பின்தங்கி இருக்கிறது” என டச்சிங்காக பேசி...
பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் தேவை அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து. இயக்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - மேற்குவங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் -...
முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த ரங்கசாமி, 2001 மற்றும் 2006 தேர்தல்களில் புதுச்சேரி மாநில முதல்வராக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், இரண்டாவது முறையாக அவர் முதல்வராக வந்ததை ஜீரணிக்க முடியாத அவரது உட்கட்சி ‘நண்பர்கள்’ செய்த உள்ளடிகளால் 2008-ல் முதல்வர் பதவியை இழந்தார். அதைத் தொடர்ந்து வைத்தியலிங்கத்தை இடைக்கால முதல்வராக்கியது காங்கிரஸ்.
இதையடுத்து, 2011-ல் காங்கிரஸை விட்டு வெளியேறிய ரங்கசாமி, ‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து’ என்ற கோஷத்தை முன் வைத்து என்.ஆர்.காங்கிரஸ்...
மத்திய அரசு வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைக்கப்பட்ட சாலைகள் எத்தனை? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
admin - 0
பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைத்த சாலைகள் எத்தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராம ஊராட்சி, இரண்டு பக்கமும் பவானி ஆற்றால் சூழப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காலங்களில்,...
திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு
admin - 0
திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுவதாக விசிக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், காங்கிரஸ் குறித்த விசிக நிர்வாகியின் கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறினாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மூலம் திமுக செய்து வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பிறகு , "2011-ம் ஆண்டு போல் விசிகவும், பாமகவும் ஒரே...









