சென்னையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக சமீபத்தில் நியமித்தது. இந்நிலையில், பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று வந்தார். தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா டிச.26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “உத்தரப் பிரதேசம் கான்பூரில், கடந்த 1925-ம் ஆண்டு டிச.26-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமை தாங்கி உரையாற்றினார். கட்சி தொடங்கப்பட்டது...
“திருப்பரங்குன்றம் தீபத்தூணை ‘சர்வே கல்’ என்று சொல்ல கனிமொழி என்ன மத்திய தொல்லியல் அலுவலரா?” என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பினார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாத தவெக தலைவர் விஜய் மீது அவர் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி தரிசனம் செய்தார். பின்பு மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். அதைத்...
காவல் துறை அதிகாரிகள் வீட்டில் ஒரு ஆர்டர்லி கூட இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்
admin - 0
தமிழகத்தில் தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஒருவர்கூட ஆர்டர்லியாக இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அரசுத் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் தூய்மைப் பணி, தோட்டப் பணி மற்றும் இதர வீட்டு வேலைகளில் கீழ்நிலை பணியாளர்களை ஈடுபடுத்தும் ‘ஆர்டர்லி’ முறை, தமிழகத்தில் பல்வேறு துறைகளில் நடைமுறையில் இருந்து வந்தது.
இந்நிலையில், காவல் துறையில் ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்க...
பொங்கலுக்கு மூவாயிரம்… போனஸாகப் பத்தாயிரம்! – கரன்சி திட்டங்களுடன் காத்திருக்கும் கட்சிகள்
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக-வும் மாநிலத்தை ஆளும் திமுக-வும், வாக்காளர்களை ‘கவர’ கரன்சி திட்டங்களை செயல்படுத்தத் தயாராகி வருகின்றன.
விடுபட்ட மகளிரில் 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை அண்மையில் வங்கிக் கணக்கில் வரவுவைத்த திமுக அரசு, அடுத்ததாக இந்தப் பொங்கலுக்கு குடும்ப அட்டை தவறாமல் மூவாயிரம் ரூபாய் பரிசு கொடுக்கும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். நிலவரத்தைப் பொறுத்து இது ஐயாயிரமும்...
“சொந்தக் கட்சிக்காரங்களே சூனியம் வெச்சுட்டாங்க” என்ற புலம்பலுடன் அண்மையில் மணாளனுடன் ஜோடியாக வந்து இலைக் கட்சியில் இடம்பிடித்த ‘கிரி’ மாவட்டத்தின் முன்னாள் சூரியக் கட்சி சேர்மன், மக்களவைத் தேர்தலிலேயே சீட்டுக்கு மோதினாராம். அது நடக்காததால் இம்முறை ‘கிரி’ தொகுதியில் சீட் கேட்கும் திட்டத்தில் இருந்தாராம்.
ஆனால், இவருக்கும் சூரியக் கட்சியின் மாவட்ட முதன்மைப் புள்ளிக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொருத்தமாம். வருங்கால அமைச்சர் கனவில் இருக்கும் மாவட்டப் புள்ளிக்கு ‘சேர்மனின்’...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை ஒட்டி வரும் டிச.24-ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தவுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு டிச.24-ம் தேதி அமரர் ஆனார்.
அவரது 38-வது ஆண்டு நினைவு நாளான வரும் டிச.24-ம் தேதி காலை...
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 175 தொகுதிகளில் சுற்றுப் பயணம் முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 28-ம் தேதி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
திருப்போரூர் அடுத்த மாமல்லபுரம் சாலையில் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் மேடை...
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருட்கள் ரூ.690 கோடிக்கு விற்பனை: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
admin - 0
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு மகளிர் சுயஉதவிக் குழுவினரின் விற்பனை கண்காட்சியை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடப்பாண்டில் சுயஉதவிக் குழுவினரின் பொருட்கள் ரூ.690 கோடிக்கு விற்பனையானதாக தெரிவித்தார்.
மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பண்டிகைக் காலங்களில் சிறப்பு விற்பனை கண்காட்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது.
அதன்படி சென்னை வள்ளுவர்...
பொங்கலுக்குப் பிறகு தேமுதிக-வில் விருப்பமனு பெறப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக மக்கள் மீட்பு மாநாடு 2.O வரும் ஜன.9-ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டு பணிகள் குறித்து நேற்று கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தேமுதிக-வின் மாநாடு, விஜயகாந்த் குருபூஜை, அதன் பின்னர் பொங்கல் என அனைத்தும்...
