அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். பழனிசாமி பிரச்சாரத்தின்போது வரும் கூட்டம், நிச்சயம் வாக்கு களாக மாறும் என்று அவர்தெரிவித்தார்.
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர், நெடுஞ்சாலை நகரில் உள்ள பழனிசாமி வீட்டுக்குச் சென்று, ஒரு மணி நேரத்துக்கும்...
போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யவில்லை. பல சந்தர்ப்பங்களில் குற்றவாளி குடும்ப உறுப்பினராகவோ அல்லது உறவினருக்கு தெரிந்த நபராகவோ இருப்பதால் புகார் அளிக்க தயங்குகின்றனர் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தென்காசியைச் சேர்ந்தவர் நீலகண்டன்.
ஒரு பெண் மற்றும் அவரது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது போலீஸார் 2 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, உயர்...
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-தவெக இடையேதான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, மக்களின் கருத்து அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று அதிமுக நகரம், ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிளை சந்தித்துப் பேசிய அவர், கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-தவெக இடையேதான் போட்டி என்று தவெக தலைவர்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை மீறி, மரங்கள், கட்டிட மேற்கூரைகள், கட்டிடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏறி நின்றனர்.
விஜய் பேசிய இடத்துக்கு அருகில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீதும் ஏராளமான தொண்டர்கள் ஏறி அமர்ந்ததால், அது பாரம் தாங்காமல்...
‘விட்டால் கிடா வெட்டி கறி விருந்தும் வைப்பார்கள்!’ – பள்ளியில் பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சரை பதம் பார்க்கும் பாஜக!
admin - 0
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை அரசு மேல் நிலைப்பள்ளியில், திமுக கொடி கலரில் தயாரான கேக்கை வெட்டி கொண்டாடிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் பஞ்சாயத்துக்கு இழுத்து அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக.
திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ-வும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் 73-வது பிறந்த நாள் 19-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை வித்தியாசமாக கொண்டாட நினைத்த அவரது ஆதரவாளர்கள், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிறந்த நாள் விழாவுக்கு...
பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கட்சியின் செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவை அங்கீகரித்து இந்திய...
மதுரை ஆதீனத்துக்கு எதிரான வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை போலீஸார் அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனத்தின் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதியது. அதையடுத்து தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு...
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள், பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இதை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான செங்கோட்டையன், கடந்த 5-ம் தேதி, செய்தியாளர்களிடம் பேசும்போது,; ‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், இதே மனநிலையில் இருப்பவர்களை சேர்த்து...
குன்னூர் கோடேரி கிராமத்தில் ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் உள்ளதாக வந்த தகவலை அடுத்து, வட்டாட்சியர் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட குன்னூர் சட்டபேரவை தொகுதியில், கோடேரி கிராமம், பாகம் 210-ல் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை, 12-வது வார்டு உறுப்பினர் மனோகரன் ஆய்வு செய்ததில் குறைகளை கண்டறிந்தார்.
அதில், குறிப்பிட்ட வாக்குச் சாவடிக்கு உட்பட்டு 12, 17-ம் எண் வார்டுகள்...
அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான். அதற்கு நன்றியுடன் இருக்கிறோம் என்று அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், வடபழனியில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை நமக்கு போதித்தவர் பேரறிஞர் அண்ணா.
சிறந்த...










