எஸ்ஐஆர் என்பது மறைமுகமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி என்றும், அரசியலமைப்பை சிதைப்பது தான் பாஜகவின் எண்ணம் என்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் சென்னை,எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: பாஜக உள்நோக்கத்துடன் தான் எஸ்ஐஆரை கையாள்கிறது.
பாஜக அரசு அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது....
“நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒன்றுமே புரியவில்லை,” என்று எஸ்ஐஆரை பற்றி ஆட்சியரிடம் புகார் மேல் புகார் வாசித்துவிட்டு வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, செய்தியாளர்களிடம் தனது அதிருப்தியை கொட்டித் தீர்த்தார்.
மதுரை மேற்கு தொகுதியில் எஸ்ஐஆர் பணிகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக நடப்பதாகவும், விண்ணப்பங்களை முழுமையாக தொகுதி மக்களுக்கு வழங்காமல் 100 சதவீதம் கொடுத்ததாக போலி கணக்கு காட்டப்படுவதாக நேற்று செல்லூர் ராஜூ, ஆட்சியர் பிரவீன்குமாரை...
பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிச.4-ம் தேதிக்கு பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால், அதற்கான காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்ற வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி...
“ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்... ஒரு படி நிச்சயம்” என்று 1967-ல் அண்ணா சொன்னார். 1967 தேர்தலில் நடந்த மாற்றம் இந்தத் தேர்தலிலும் நடக்கப் போகிறது என்று சொல்லும் விஜய், “எல்லோருக்கும் நிரந்தரமான ஒரு வீடு... வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், கார் என்பது லட்சியம்... அதற்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கு வோம்” என்று அண்ணாவின் பூமியில் நின்று முழங்கியிருக்கிறார்.
இதன் மூலம்...
திமுக இளைஞரணியின் திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நேற்று திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில்,தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
1.50 கோடி தேர்தல் நிதி: அப்போது அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், தேர்தல் நிதியாக ரூ.1.50 கோடிக்கான காசோலையை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். தொடர்ந்து, இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி...
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி) தொகுதி விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாகும். இங்கு, 2011-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ப.தனபால் தமிழக சட்டப்பேரவை தலைவரானார். அதேபோல், 2016-ல் இங்கு வென்ற அதிமுக வேட்பாளர் வி.சரோஜா சமூகநலத்துறைக்கு அமைச்சரானார்.
அடுத்ததாக, 2021-ல் இங்கு வெற்றிபெற்ற திமுக-வின் மா.மதிவேந்தன், இப்போது ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார். ராசிபுரத்துக்கு இப்படியொரு ‘ராசி’ இருப்பதால் இம்முறை இங்கு போட்டியிட இரண்டு முக்கிய கூட்டணியிலும்...
சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்: மக்கள் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்தனர்
admin - 0
சென்னையில் உள்ள 947 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான வாக்காளர் உதவி மையம் நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி சார்பில், வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக வாக்காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி...
எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல்
admin - 0
எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன், அபுதாபியில் நடைபெற உள்ள குத்து சண்டை போட்டியில் பங்குபெற உள்ள இரண்டு வீராங்கனைகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்கிய பின் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் என இரண்டு நிறுவனங்களும்...
குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் 4 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இளைஞர்கள் பலரும் அரசுப் பணியில் சேர முயன்று வருவதால் போட்டித்...
மேகேதாட்டு குறித்த கர்நாடக முதல்வர் கருத்துக்கு திமுக அரசு வாய் திறக்காதது ஏன்? – ஓபிஎஸ் கேள்வி
admin - 0
‘முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரியில் மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை என்று கர்நாடக முதல்வர் கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. கர்நாடக முதல்வரின் கருத்து தமிழகத்தைப் பாலைவனமாக்க வழிவகுக்கும். இதன்மூலம், உபரி நீரையும் தமிழகத்துக்கு தரக்கூடாது என்ற கர்நாடக அரசின் தீய எண்ணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டினால், தமிழகத்துக்கு வரும் உபரி நீரும் நின்றுவிடும். இந்தத் திட்டம் கர்நாடகத்துக்கு மட்டும்தான் பயனளிக்கும்....




