விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் முன்விரோதத்தில் பெட்டிக்கடைக்காரரை கொலை செய்த வழக்கில் விடுவிக்கப்பட்ட, முன்னாள் பஞ்சாயத்து தலைவி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21 பேருக்கு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கிளியனூர் அருகேயுள்ள காட்ராம்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர்களான கிருஷ்ணவேணி தரப்புக்கும், வில்வமணி தரப்புக்குமிடையே தேர்தல் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்த பாஸ்கர் என்பவர், வில்வமணிக்கு ஆதரவாக...
தமிழக இடைக்கால பட்ஜெட்டை வரவேற்றும், அதிருப்தி தெரிவித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்சி ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் தலைவர் என்.கனகசபாபதி: சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினைக்கு தீர்வாகவும், நிதி ஆதாரத்தின் உயிர்நாடியாகவும் விளங்கும் TN TReDS என்ற தளத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதுவரை ரூ.5,171 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மூலம் எம்எஸ்எம்இ துறைக்கு உதவியிருப்பதை பாராட்டுகிறோம். இந்த நிதிசார்ந்த நடவடிக்கைகள்...
தமிழக அரசு துறைகளுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை டிஎன்பிஎஸ்சி எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2 மெயின் தேர்வுகள் கடந்த 8-ம் தேதி காலையும், பிற்பகலும் நடைபெறுவதாக இருந்தன.
ஆனால், அன்று காலையில் சென்னையில் 3 தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு இடங்கள் ஒதுக்குவதில்...
புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தவெகவில் இணைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நம்பம்பட்டியைச் சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன் (57).
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான இவர் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு அளித்திருந்தார். நேர்காண லிலும் பங்கேற்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிமுகவில் இருந்து விலகி, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: எம்ஜிஆர்,...
கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் 45 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்: 44 ரயில் சேவைகள் ரத்து
admin - 0
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில்களின் சேவையில் கடந்த 5-ம் தேதி முதல் வரும் ஏப்.5-ம் தேதி வரை 45 நாட்களுக்கு சுமார் 44 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று கூறியதாவது: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக,...
கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.27-ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு
admin - 0
அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.27-ம் தேதி பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், மார்ச் முதல் வாரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறுவரையறை செய்வது, ஆரம்ப சுகாதார நிலையமருத்துவர்களுக்கு ரூ.3 ஆயிரம் படி வழங்குவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவப் பணியிடங்கள் உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாக...
போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு மற்றும் அண்ணப்பிளவு சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உதடு மற்றும் அண்ணப்பிளவு சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உதடு மற்றும் அண்ணப்பிளவு சார்ந்த சிகிக்சைக்கு ஒருங்கிணைந்த மையம் நேற்று திறக்கப்பட்டது. ஸ்ரீராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலர் சம்யுக்தா வெங்கடாசலம் மற்றும் துணைவேந்தர் மருத்துவர் உமாசேகர் ஆகியோர் முன்னிலையில்,...
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்து இரண்டு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்த தனது கருத்துகளை தொடர்ச்சியாக தெரிவித்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில், கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்றும் காங்கிரஸில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு திமுக, அதிமுக வர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
கோவை புலியகுளம் பகுதியில், இளைஞர்கள் த.வா.க-வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெ ற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல கட்சிகள் கூட்டணி பேசிவருகின்றன. ஆனால், நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம்.
தமிழீழ மண்ணில் நடந்த இனப் படுகொலைக்காக நீதி கேட்டு...
அதிமுக இரட்டை இலை சின்னம் விவகாரம்: தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி
admin - 0
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்துவது தொடர்பாக வி. புகழேந்தி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்துவது தொடர்பாக வி. புகழேந்தி அளித்த புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2024ம் ஆண்டு...










