பாமகவின் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை புரசைவாக்கம் தாண்டவம் தெருவை சேர்ந்த பாமகவின் வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் சரவணன், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
அதனால், ஜூன் 10-ம் தேதி (நேற்று) முதல் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்...
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் நியமன ஆணையை பொதுசுகாதாரத்துறை ரத்து செய்தது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 1,021 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த 25 ஆயிரம் மருத்துவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்ச்சி பெற்றவர்களில் 1,021 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களில்...
ஜூலை 1-ம் தேதி முதல் 296 ரயில்களின் எண்கள் மாற்றப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவல் ஏற்பட்டபோது, நாடு முழுவதும் பல்வேறு ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. கரோனா பாதிப்பு குறைந்த பிறகு, மீண்டும் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனினும், மாவட்டங்களில் இருந்து முக்கிய நகரங்களை இணைக்கும் குறுகிய தூர சாதாரண கட்டண ரயில்களும் சிறப்புரயில்களாக இயக்கப்படுகின்றன. இதனால், இந்த வகை ரயில்களுக்கு தற்காலிமாக, பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்கள்...
தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
3-வது முறையாக மோடி பிரதமராக நேற்று பதவியேற்றார். இந்நிலையில், அண்ணாமலை மத்திய அமைச்சரானால், மாநில தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டது.
ஆனால், டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் தேநீர் விருந்தில் தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மட்டுமே பங்கேற்றார். அதேபோல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரும் பங்கேற்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சராக...
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கெனவே 20 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 17 ஆயிரம் பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறை வசதி ஏற்படுத்தப்படும். கல்வித் துறையில் தமிழகம் போட்டி போடுவது பிற மாநிலங்களோடு அல்ல, பிற நாடுகளுடன்.
நீட் தேர்வு ஏழை மாணவர்களை பழிவாங்க கூடிய ஒன்றாகஇருக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம். நீட்தேர்வில்...
கடற்கரைகள், தி.நகரில் வாகன நிறுத்த கட்டண வசூலில் முன்னாள் ராணுவத்தினர் – சென்னை மாநகராட்சி திட்டம்
admin - 0
மெரினா கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணியில் முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, தியாகராயநகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைத்துள்ளது.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு
admin - 0
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய பள்ளிகளுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ச.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் வேண்டி சில...
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை நடைபெறுகிறது: 6,244 காலி இடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி
admin - 0
தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார்20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள...
தமிழகத்தில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதத்துக்காக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதிமீண்டும் கூடுவதாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டுமுதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதிஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.15-ம்தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. நிறைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு பதில் அளித்தார். இதையடுத்து, இந்த 2024-25 நிதி ஆண்டுக்கான பொதுபட்ஜெட்டை...
நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
admin - 0
கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: சமீபத்திய நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணைமதிப்பெண்கள் என்ற போர்வையில்நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளிவழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின்அதிகாரக்...









