வெயிலின் தாக்கத்தால் அனைத்து மருத்துவமனைகளிலும் உப்பு, சர்க்கரை கரைசல் விநியோக வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தல்
admin - 0
தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருவதால், இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகளை போதிய கொள்முதல் செய்ய வேண்டும். அத்தியாவசிய மருந்துகள், ரத்த நாளங்கள் வழியே செலுத்தப்படும் திரவ மருந்துகளும் கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும்...
தேர்தல் காலங்களில் வங்கியில் எடுக்கும் பணத்துக்கு அதன் மேலாளர் சான்றிதழ் வழங்க வங்கிகளுக்கு வழிகாட்டுதல் வெளியிட ரிசர்வ் வங்கி கவர்னருக்கு, தமிழக வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் காலங்களில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம்,கண்காணிப்புக் குழுக்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
தினசரி வணிக நடவடிக்கைகளுக்காக வங்கிகளிலிருந்து பணம் எடுத்து பயன்படுத்தும் உண்மையான...
‘மார்ச் இறுதிக்குள் பணியில் இணைந்தால் மட்டுமே 2 ஆண்டுகள் முடிவில் நீட் தேர்வில் பங்கேற்க முடியும் என்பதால், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்று 751 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்’ என்று அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு 1,100 உதவி மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கு கடந்த ஜன.25-ம் தேதி நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 20 ஆயிரம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேரின்...
சென்னையில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில், 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் கீழ் இயங்கும் தேர்தல் ஊடக கண்காணிப்பு மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை, மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு...
தமிழகத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை திமுக உருவாக்குகிறது: எல்.முருகன் குற்றச்சாட்டு
admin - 0
தமிழகத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை திமுக உருவாக்குகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா என எந்த மாநிலத்திலும் பெட்ரோல் பங்கில் கூட்டம் கிடையாது. திமுகவினர் வேண்டுமானால், நேரில் வந்து பார்க்கலாம்.
எங்கும் இல்லாத பதற்றமான சூழ்நிலையை தமிழகத்தில் திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில்...
தேர்தல் பிரச்சார அனுமதியை இணைய வழியில் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று, அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் அமலில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் விளக்கும் கூட்டம், மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் குமரகுருபரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28.30 லட்சம்...
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தையடுத்து, அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோக்கள், பேரணிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, தமிழக அரசு கடந்த ஜன.5 அன்று அரசிதழில் வெளியிட்டது.
அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மற்றும் அங்கீகாரம் பெறாத கட்சிகள் என பாரபட்சமாக நிறை வேற்றப்பட்டுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என தவெக இணைப்...
320 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை கொடுத்துவிட்டு 1,071 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொய்: ராமதாஸ், அன்புமணி குற்றச்சாட்டு
admin - 0
மருத்துவர்கள் 320 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கிவிட்டு, 1071 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக திமுக அரசு பொய் சொல்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் இருவரும் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ராமதாஸ்: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 1,100 உதவி மருத்துவர்களை தேர்தெடுக்க, விண்ணப்பித்தவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு 1,071...
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலுவல் நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படுகிறது.
மாநிலம் முழுவதும் மொத்தமாக 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பாக 108 நிர்வாகத்தின் மாநிலத் தலைவர் செல்வகுமார், மண்டலத் தலைவர் முகமது பிலால் ஆகியோர் கூறியதாவது: தேர்தல் காலத்தில்...
தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் மெரினா உட்பட 3 இடங்களில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் மாலை முதல் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, அரசியல் கட்சிகள், பணம் கொடுத்து வாக்காளர்களை கவர்வதைதடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்துள்ளது.
இந்த பறக்கும் படையினர் முக்கிய பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர். அதன்படி, மெரினா...










