Google search engine
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் முடக்கி உள்ளனர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார்...
மருத்துவக் கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)செயலாளர் னிவாஸ், அனைத்துமருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய சமூகநலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர்கள் சார்பில் சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணைய தலைவருக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், மருத்துவக் கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் புழக்கமில்லா இந்தியா திட்டத்தின் கீழ்...
தேவையில்லாமல் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படும் நபர்களுக்கு போலீஸார் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடலாமா என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குண்டர்...
மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு கடந்த 53 ஆண்டுகளாக லாரி தண்ணீர்தான் விநியோகம் செய்யப்படுகிறது. லட்சக் கணக்கான மக்கள் வசிக்கும் மதுரை ஊருக்கே அன்றாடம் குழாய்களில் தடையின்றி குடிநீர் வழங்கும் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக மதுரை உருவாக்கப்பட்டது. 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், கல்வி, சாலை...
சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த இந்தியக் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் ராகேஷ் பால் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்த விழாவை ஒருங்கிணைக்கும் பணிக்காக இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் ராகேஷ் பால் (59)...
கிழக்கு கடற்கரைச் சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: கிழக்கு கடற்கரைச் சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையில்...
கள உதவியாளராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய கேங்மேன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ளமின்வாரிய தலைமை அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள், ``தமிழ்நாடு மின்வாரியத்தில் 63 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் மின்வாரியம், அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக களஉதவியாளராக மாற்ற வேண்டும். குடும்பத்தைப்...
கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் தமிழக அரசின் அழைப்பை ஏற்றே ராஜ்நாத்சிங் பங்கேற்றார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். தென்னிந்திய அளவிலான செய்தி ஒளிபரப்புத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை அகில இந்திய வானொலி மையத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்த 8 மாதங்களுக்கு முன் டிடி தமிழ் சேனல் மேம்படுத்தப்பட்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது....
திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ள நீர் அமணலிங்கேஸ்வரர் கோயிலைச் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் ஆலயம்உள்ளது. அங்கு தை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதுதவிர தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலைகளும், அதன்நடுவே பாயும் பஞ்சலிங்க அருவியும்...
முதல்வர் மருந்தகத்துக்கும், அம்மா மருந்தகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த மருத்துவமனை ஒரு நூற்றாண்டை கடந்த பழமைவாய்ந்த மருத்துவமனையாகும். பழமைவாய்ந்த இந்த மருத்துவமனை கடந்த காலங்களில் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த மருத்துவமனையில் ரூ.26.50 கோடி மதிப்பீட்டில்...