Google search engine
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக ஆட்சியிலும்...
எம்​ஜிஆர், ஜெயலலிதா உரு​வாக்​கிய இயக்​கம் பழனி​சாமி​யால் வலு​விழந்​து​விட்​ட​தாக நிதி அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார். கோவை விமான நிலை​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் மேலும் அவர் கூறிய​தாவது: தமிழக பொருளா​தார நெருக்​கடிகளை சமாளிக்​கும் திறமை விஜய்​யிடம் உள்​ளது. மகளிர் பாது​காப்​பு, போதைப்​பொருள் தடுப்பு போன்ற விஷ​யங்​களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்​கப்​பட்டுவரு​கிறது. 717 டாஸ்மாக் கடைகள் அகற்​றப்​பட்​டுள்​ளன. பொறுப்​பேற்ற உடனேயே இவ்​வளவு சாதனை​கள் செய்யப்பட்டுள்ளன. அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் நிலைப்​பாடு​களை பார்க்​கும்​போது எம்ஜிஆர், ஜெயலலிதா...
தமிழகம் முழு​வதும் தெரு நாய்​கள் குழந்​தைகள், பெரிய​வர்​கள் என அனை​வரை​யும் கடிக்​கும் நிகழ்வு தொடர் கதை ஆகி​விட்​டது. இதனால் உயி​ரிழப்​பு​களும் ஏற்​படு​கிறது. திரு​வள்​ளூர் அடுத்த காக்​களூர் ஊராட்​சி​யில் நாய்கள் கூட்​ட​மாக சுற்றி வரு​கின்​றன. திரு​வள்​ளூரில் இருந்து காக்​களூர் வழி​யாக இருசக்கர வாக​னத்​தில், நடந்து செல்​பவர்​கள் நாய்​கள் கடித்து விடுமோ என்ற அச்​சத்​தில் சாலையை கடந்து செல்​கின்​றனர். இந்​நிலை​யில் காக்​களூர் ஊராட்சி குடி​யிருப்பு பகு​தி​யில் சுற்​றித் திரிந்த தெரு நாய்க்கு வெறி பிடித்​த​தாக...
மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தஞ்​சாவூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறியது: சமூக நீதி, மதச்​சார்​பின்​மை, ஜனநாயகம், பெண்​கள் பாது​காப்​பு, தமிழக வாழ்​வா​தா​ரங்​களை காக்​கும் கடமை இவற்​றில் எள்​ளள​வும் பிச​காமல் முதல்​வர் விஜய் ஆட்​சியை நடத்த வேண்​டும். மத்​திய அரசின் பி.எம். திட்​டத்​தையோ, மும்மொழி திட்​டத்​தையோ முந்​தைய திமுக அரசு ஏற்​றுக்​கொள்ளவில்லை. அதே நிலைப்​பாட்டை தான் இந்த அரசும் பின்​பற்ற வேண்​டும் என்று வலி​யுறுத்​துகிறேன். நீட் தேர்வு நிரந்​தர​மாக ரத்து செய்​யப்பட வேண்​டும். கேள்​வித்​தாள்...
சென்னை ரயில்வே கோட்​டத்​தில், நடப்பு நிதி​யாண்​டில் 2,600 கிலோ​வாட் சூரிய மின்​சக்​தியை உற்​பத்தி செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டத்​தில், சூரியசக்தி உள்​கட்​டமைப்பை விரிவுபடுத்த முயற்சி எடுக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், கடந்த நிதி​யாண்​டில் பரங்​கிமலை ரயில் நிலை​யம், ஆவடி​யில் உள்ள மண்டல மின்​சார இழுவை பயிற்சி மையம், ஆண்​கள் விடுதி மற்​றும் கிண்டி ரயில் நிலை​யம் ஆகிய​வற்​றில் மொத்​தம் 140 கிலோ​வாட் திறன்...
மதுரை மாவட்​டம் கொட்​டாம்​பட்டி அருகே சாலை​யின் தடுப்​புச் சுவரில் கார் மோதி​ய​தில் கோயிலுக்​குச் சென்று திரும்​பிய ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மதுரை அண்ணா நகரைச் சேர்ந்​தவர் பிர​காஷ் (76). இவரது உறவினர்​கள் சென்னை சூளைமேட்​டைச் சேர்ந்த வெங்​கடேஷ் ( 60), இவரது தாய் வசந்தா (90), மனைவி ஆஷா ( 58), மாமி​யார் சுலோச்​சனா ( 72) ஆகியோர் திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயிலுக்கு...
தமிழகத்​தில் 13 ஐபிஎஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். முதல்​வரின் பாது​காப்பு பிரிவு டிஐஜி​யாக தர்​ம​ராஜன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதி​காரி​கள் நிலை​யில் பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. இதன் தொடர்ச்​சி​யாக ஐபிஎஸ் அதி​காரி​கள் நிலை​யிலும் மாற்​றங்​கள் நடந்து வரு​கின்​றன. முதல் கட்​ட​மாக, உளவுத்​துறை ஐ.ஜி.​யாக அஸ்ரா கார்க் நேற்று முன்​தினம் நியமிக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், தமிழகத்​தில் மேலும் 10 ஐபிஎஸ் அதி​காரி​களை பணி​யிட மாற்​றம் செய்து உள்​துறைச்...
சென்​னை​யில் 27 மெட்ரோ ரயில் நிலை​யங்​களில், பயணி​களின் வசதிக்​காக, கூடு​தலாக 55 நகரும் படிக்​கட்​டு​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில், 2 வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. பாது​காப்​பான, விரை​வான, சொகு​சான பயணம் காரண​மாக, மெட்ரோ ரயில்​களில் பயணிப்​போர் எண்​ணிக்கை நாள்​தோறும் உயர்​கிறது. பயணி​களின் எண்​ணிக்கை உயர்​வதற்கு ஏற்ப, அவர்​களின் தேவை​களை, வசதி​களை நிறைவேற்​று​வது அவசி​ய​மாகிறது. அந்த வகை​யில், சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்​டம் மற்​றும் அதன் நீட்​டிப்பு...
செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு கிராமங்​களில் 171 நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம், விவ​சா​யிகளிட​மிருந்து நேரடி​யாக நெல் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது. மேலும், நடப்​பாண்​டில் கூடு​தலாக நெல் பயி​ரிட்டு அறு​வடை செய்​யப்​பட்டு உள்​ள​து. இந்​நிலை​யில், விவசாயிகள் தாங்​கள் அறு​வடை செய்து வைத்​துள்ள நெல்லை விரை​வாக கொள்​முதல் செய்ய வேண்​டும் என வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அரசு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் பல நாட்​கள் காத்​திருந்து நெல் வழங்​கும் நிலை உள்​ள​து. தற்​போது,...
தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி வெளி​யிட்ட அறிக்​கை: மத்​திய அரசு 2026-27 கரீப் பரு​வத்​துக்கு 14 வேளாண் உற்​பத்தி பயிர்​களுக்கு அறி​வித்​துள்ள குறைந்​த​பட்ச ஆதரவு விலை​யானது வழக்​கம் போல் விவ​சா​யிகளை ஏமாற்​றும் செய​லாகவே உள்​ளது. கடந்த 16 ஆண்​டு​களாக போராடிவரும் விவ​சா​யிகளின் அடிப்​படை கோரிக்​கை​யான, வேளாண் ஆணை​யத் தலை​வர் எம்​.எஸ்​.சு​வாமி​நாதனின் பரிந்​துரை​யான ‘சி 2 + 50’ (சாகுபடி செல​வுடன் 50 சதவீத லாபம்) என்ற முறையி​லான...