Google search engine
கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக வசித்து வரும் 114 வீடற்றோர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் உதயநிதி இன்று வழங்குகிறார். சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்து வந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிக்காக அகற்றப்பட்டன. இக்குடும்பங்கள் கண்ணப்பர் திடல் பகுதியில் அப்போது தங்க வைக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை, அடிப்படை வசதிகள் இன்றி அங்கு...
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில்,...
சென்னையில் நடைபெறும் இந்தியா - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரைபிசிசிஐ உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தலைமை தாங்கினார். அப்போது செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: வங்கதேச மக்களை பாகிஸ்தான் கொடுமைப்படுத்தியபோது, இந்திய ராணுவம் அங்குசென்று வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கிக்கொடுத்தது. அப்போது...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை மிரட்டும் வகையில் பேசியவர்கள் மீது பாஜக தலைமையோ, பிரதமர் மோடியோ உரிய நடவடிக்கை எடுக்காததற்கு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகிலஇந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ்...
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை நடந்தது. நேற்று காலை சென்னை வந்த பினராயி விஜயன், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு இசிஜி, எக்கோ உள்ளிட்ட இதயம் தொடர்பான பரிசோதனைகள், ரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. பரிசோதனையில், அவரது உடல்நலம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்போலோவில் இருந்து அவர் நேற்றுமதியம் புறப்பட்டு சென்றார். சிலஆண்டுகளுக்கு முன்பு சென்னைஅப்போலோ மருத்துவமனையில்...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சி தமிழக பொதுச்செயலாளர் கே.ஜெய்சங்கர் எழுதிய கடிதம்: ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், பிபிஜி சங்கர் ஆகியோரது கொலை தொடர்பான வழக்குகள், செல்வப்பெருந்தகை மீது உள்ளன.ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்துறைகளை கட்டுப்படுத்தும் ஒருவன்முறை கும்பலின் தலைவர்தான் வேலூர் சிறையில் இருக்கும் நாகேந்திரன். அவருடைய மகன், இளைஞர் காங்கிரஸில் பொதுச்செயலாளராக இருந்த அஸ்வத்தாமன். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இளைஞர் காங்கிரஸில்...
மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்ரன்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனத்தில் உள் ஒதுக்கீடு அளிக்கவும் அவர்கள்கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 30 ஆயிரம் கள உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், அந்த காலியிடங்களில் ஐடிஐ படித்தவர்களையும் ஐடிஐஅப்ரன்டீஸ் பயிற்சி முடித்தவர்களையும் பணிநியமனம் செய்யக்கோரி தமிழ்நாடு ஐடிஐ படித்த வேலைவேண்டுவோர் ஐக்கிய சங்கம் சார்பில் அண்ணாசாலையில்...
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது சிறுமியிடம் போலீஸார் பெற்ற வாக்குமூலம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவரது பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும்சிறுவன் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக பணிபுரிந்த மருத்துவர் சுப்பையாவுக்கு எதிராக பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் சுப்பையா காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில்ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மருத்துவர்சுப்பையாவுக்கு எதிராக இதுபோலபல புகார்கள்...
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவராக விஜய் அமிர்தராஜ் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், துணைதலைவராக கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நுங்கம்பாக்கம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள டென்னிஸ் மைதானஅரங்கில் கடந்த 16-ம் தேதிநடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின்தலைவராக முன்னாள் வீரர் விஜய் அமிர்தராஜ் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக ஏ.வெள்ளையன், கார்த்திப.சிதம்பரம் எம்.பி., ஹரேஷ் ராமசந்திரன், விஜய்...