மத்திய பாஜக அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் நிலை உருவாகலாம்என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அம்பேத்கர், பெரியாரை போற்றுவதைப்போல, திருவிக,மறைமலை அடிகள், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், முத்துராமலிங்கத் தேவர், வேலு நாச்சியார், அழகுமுத்துக்கோன் போன்றவர்களையும் நடிகர் விஜய் போற்ற வேண்டும். அவருடன் கூட்டணி அமைப்பீர்களா என்று என்னை கேட்பதைவிட, சீமானுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று அவரிடம்...
சென்னையில் மழைநீர் வடிகால்வாய், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம்விட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 நவ.1, 7, டிச. 1 மற்றும் 2019 ஜன. 3, செப். 26, 2020 பிப்....
பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து குடியிருப்போர் சங்கங்களுக்கு பயிற்சி: மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை
admin - 0
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், குடியிருப்போர் நலச்சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி அளிக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. டிசம்பர் வரையிலான இந்த மழைக்காலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள் அதிகளவில் மழையை பெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அதிகளவில் தண்ணீர்தேங்கி ஆண்டுதோறும் சிக்கலை...
நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பெருமிதம்
admin - 0
நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.
சென்னை துறைமுகம் சார்பில், ‘நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் சக்தியை பயன்படுத்துதல்’ என்றநிகழ்ச்சியும் பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தூய்மைப்பணி தொடக்க விழாவும் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர்சுனில் பாலிவால் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ‘அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு இன்று...
வெள்ளி விழா, பொன் விழா, பவள விழாக்களைபோல நூற்றாண்டு விழாவிலும் திமுக ஆட்சியில் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
admin - 0
வெள்ளி விழா, பொன் விழா,பவள விழாவின்போது ஆட்சியில் இருப்பதுபோல, நூற்றாண்டு விழாவின் போதும் திமுக ஆட்சியில் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் நேற்று நடந்த திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் முதல்வர் பேசியதாவது: தொண்டர்களின் வியர்வை, மூச்சுக் காற்றால்தான் திமுக கம்பீரமாக, தலை நிமிர்ந்து நிற்கிறது. நீங்கள் இல்லாமல் திமுக இல்லை; நானும் இல்லை.
கடந்த 1967-ம் ஆண்டு எனது 13 வயதில்...
கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க, எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்த 151 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில்5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்...
இந்தியாவிலேயே மிக மோசமான சாதி கட்சி விசிக தான் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஹெச்.ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்துத்துவா கும்பல் திராவிட கட்சிகளை ஒழிக்க நினைக்கிறது என வைகோ கூறியிருக்கிறார். முதலில் மதிமுகவை ஒழித்தது...
செவிலியர்களுக்கான தேவை ஆண்டுதோறும் 18% அதிகரிக்கிறது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
admin - 0
இந்தியாவில் செவிலியர்களுக்கான தேவை ஆண்டுதோறும் 18 சதவீதமும், உலக அளவில் 100 சதவீதமும் அதிகரித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் தனியார் செவிலியர்கள் கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலிக்காட்சி மூலம் பங்கேற்று ஆசியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியது:
பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக...
புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்? – தெளிவுபடுத்த சசிகலா வலியுறுத்தல்
admin - 0
திமுக செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் எத்தனை நிறுவனங்கள் வந்துள்ளன; எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் பொதுச் செயலர் சசிகலா தெரிவித்தார்.
அண்ணா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு அதிமுக முன்னாள் பொதுச் செயலர் சசிகலா வந்தார். அவர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அண்ணாவின் இல்லத்தையும் அவரது புகைப்படங்களையும் சுற்றிப் பார்த்தார்.
பின்னர்...
“தேர்தல் கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது.” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' குறித்து திருவாரூரில் நடைபெற்ற மண்டல சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி திருமாவளவன் இக்கருத்தினைக் கூறினர்.
ஏற்கெனவே ‘ஆட்சியிலும்...










