விருகம்பாக்கத்தில் ஏவி.எம்.சரவணனின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சி முடிந்து காரில் புறப்பட்டு சென்றார்.
முதல்வரின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனம் ஆற்காடு சாலையில் வரும்போது, இளைஞர் ஒருவர் முதல்வரிடம் மனு கொடுக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில், மனு அளிக்க முயன்றவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் (33) என்பதும், திமுக ஒன்றிய மாணவரணி துணைச் செயலர் என்பதும் தெரியவந்தது. இவரது...
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து உலக நாடுகள் அனைத்தும் உரக்க குரல் எழுப்ப வேண்டும்: மார்க்சிஸ்ட் அறிவுறுத்தல்
admin - 0
வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை கண்டித்து உலக நாடுகள் உரக்க குரல் எழுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெனிசுலா போதைப் பொருள் மையம் என்ற போலியான குற்றச்சாட்டை முன்வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் தாக்குதல் ஒரு சட்டவிரோத அடாவடி தாக்குதல் மட்டுமல்ல, அந்த நாட்டின் இறையாண்மையை காலில் போட்டு...
“பொது எதிரியை வீழ்த்துவதே நோக்கம்” – அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் நேர்காணல்
admin - 0
அதிமுகவில் 2008-ம் ஆண்டிலிருந்து பயணிக்கும் சிங்கை ராமச்சந்திரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்று, அவரால் கட்சியின் ஐடி விங் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் கடந்த 2016 தேர்தலில் அதிமுக வெற்றிக்கு டிஜிட்டல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். இப்போது மாணவரணி மாநில செயலாளராக இருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மாவட்டங்கள்தோறும் பயணித்து, கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். இந்த பரபரப்பான பணிகளுக்கிடையே ‘ஜனநாயகத்...
போராட்டங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் நிறைந்த திமுக அரசை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் வேலை என சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டையொட்டி, சசிகலா சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சி வந்ததிலிருந்து தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருத்தணி ரயில் நிலையத்தில் சிறுவர்கள், வட மாநில இளைஞரை போதையில் கடுமையாக தாக்கியுள்ளனர். அடுத்த...
சட்டப்பேரவை தேர்தலில் தங்களது கூட்டணி திமுக-வுடனா அதிமுக-வுடனா என இறுதி செய்யும் முயற்சியில் தேமுதிக தீவிரமாக இருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் வரும் 5-ம் தேதி மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேமுதிக எந்தப் பக்கம் சாயும் என்பதும் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல்...
கடந்த டிசம்பர் 26-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், “கடந்த நான்கரை ஆண்டுகளில் நாங்கள் செய்ததில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததா..? அவர்களால் இதற்கு பதில் சொல்ல முடியுமா..? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச்” என்று சவால் விடுத்திருந்தார். இந்த சவாலுக்கு வரும் 5-ம் தேதி பதிலளிக்க தயாராகி வருகிறது கள்ளக்குறிச்சி அதிமுக.
ஸ்டாலின் சேலஞ்ச் வைத்த...
பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் இணைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வடகரை பகுதியில் பேச்சி ஓடையின் குறுக்கே நபார்டு நிதி உதவியுடன் ரூ.6 கோடியில் அமைய உள்ள பாலத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தினமும் கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருட்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகரித்துவிட்டது. மாணவர்கள்...
தாம்பரம் காவல் ஆணையராக கடந்த ஜூலை மாதம் பதவியேற்ற அபின் தினேஷ் மோதக் பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஏற்கெனவே இங்கு ஆணையராக இருந்த ஏடிஜிபி அமல்ராஜ் மீண்டும் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல, ஆவடி காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி கி.சங்கர், சிறைத் துறை இயக்குநராகப் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, தென் மண்டல ஐ.ஜி.யாகப்...
“காசியிலும் தமிழ் இலக்கியங்கள் ஓங்கி ஒலிக்கின்றன” – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம்
admin - 0
காசி ஆன்மிகத் தலைநகராக இருந்தாலும் தமிழ் இலக்கியங்கள் அங்கு ஓங்கி ஒலிக்கின்றன என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கூறினார். உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் ‘காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி-4.0 டிச. 2 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது.
இதன் நிறைவு விழா ராமேசுவரத்தில் நேற்று நடந்தது. இதில், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை தந்த...
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கிரசியன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்து, படகில் இருந்த நாகராஜ் (47), பிரபு (49), ரூபன் (45) ஆகியோரைக் கைது செய்து, காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர்களை இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்....
