கோயில்களில் சிறப்பு கட்டண தரிசனத்துக்கு எதிராக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
admin - 0
விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரூ.500 வரை பணம் வசூலித்து, சிறப்பு கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், புதுமண தம்பதிகள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மடாதிபதிகள், ஜீயர்களை இலவச சிறப்பு தரிசனத்துக்கு...
தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், செங்கோட்டையன் ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், செங்கோட்டையனுக்கு இலாகா மாற்றப்பட்டு நிதித் துறைக்கு பதில் வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் - இலாகா
1. முதல்வர் விஜய் - பொது, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், டிஆர்ஓ, காவல், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், சிறப்பு...
கட்சியை அல்ல… கூட்டணி பாலிசியையே மாற்ற வேண்டும்! – திமுகவுக்குள் எழும் பாஜக ஆதரவுக் குரல்கள்
admin - 0
“திமுக-வுடனான எங்களது உறவு தேர்தல் காலத்து உறவு அல்ல. இது கொள்கை ரீதியான கூட்டணி. திமுக தலைவர் ஸ்டாலினுடன் நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம். திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு முஸ்லிம் லீக் கட்டுப்படும்” என்று சொன்ன இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்கத் தயாராகிவிட்டது.
“எக்காலத்திலும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம்” என்பதை அழுத்திச் சொல்லியே இத்தனை ஆண்டு...
எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிட வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும் முடியும் என, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் திகழ்கிறது. நூற்றாண்டை கடந்த இந்த ரயில் நிலையத்தில் அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பு பணி...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பின்னர் அரசியலுக்கு வந்தவர் சீமான். மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும், சீமானுக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து, 2019 ஜனவரியில் ஆண் குழந்தை பிறந்தது. மாவீரன் பிரபாகரன் என அக்குழந்தைக்கு பெயரிட்டனர்.
இந்நிலையில்,தற்போது மீண்டும்...
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தவெக எம்எல்ஏ.க்கள் 21 பேர், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இரண்டு பேர் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களைப் பற்றிய பின்புலக் குறிப்புகள் இங்கே...
ஏ.ஸ்ரீநாத் - தமிழக முதல்வர் விஜய்யின் நண்பரான இவர், தூத்துக்குடியில் திமுக அமைச்சர் கீதாஜீவனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 52 வயதான இவர் விஜய் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம்...
நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் தன்னை நேரில் அணுகலாம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
admin - 0
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை தன்னை நேரில் அணுகலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அகில இந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகள் புதுச்சேரியில் வரும் 22 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், நேற்று தமிழ்நாடு ஜூனியர்...
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து விசிக மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் நேற்று வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செயலாளர்...
ஆம்னி பேருந்துகளுக்கான சாலை வரியை குறைக்க வேண்டும் என, உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் அன்பழகன், முக்கிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகரின் மையப்பகுதியில், மிகப்பெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செயல்படுத்த தமிழக...
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் செ.ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். மொத்தம் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். அனைவரும் ஆளுநர் மாளிகையில் திரண்டுள்ளனர்.
அமைச்சர்கள் பட்டியல்:
1. ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ
2. எஸ்.கமலி - அவிநாசி
3. சி.விஜயலக்ஷமி - குமாரபாளையம்
4. ஆர்.வி.ரஞ்சித் குமார் - காஞ்சிபுரம்
5. வினோத் - கும்பகோணம்
6. ராஜீவி - திருவாடானை
7. பி.ராஜ்குமார் - கடலூர்
8. வி.காந்திராஜ் - அரக்கோணம்
9. மதன்ராஜ்.பி -...










