நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பின்னர் அரசியலுக்கு வந்தவர் சீமான். மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும், சீமானுக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து, 2019 ஜனவரியில் ஆண் குழந்தை பிறந்தது. மாவீரன் பிரபாகரன் என அக்குழந்தைக்கு பெயரிட்டனர்.
இந்நிலையில்,தற்போது மீண்டும் 7 ஆண்டு இடை வெளிக்கு பிறகு, சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு நேற்று 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.















