Google search engine
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வதுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.நேற்றைய (பிப்.13) சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை அருகில்தான் துணைத் தலைவர் அமர்வது பேரவையில் மரபாக உள்ளது. துணைத் தலைவராக...
சட்டப் பேரவையில், கேள்வி நேரத்தின்போது, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ``முதல்வர் வெளிநாடுகளுக்குப் பயணித்து அந்நிய முதலீடுகளைப் பெற்று வருகிறார். இந்த முதலீடுகள் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை நோக்கி வருகின்றன. தமிழகத்தில் 36 சதவீதம் தொழிற்சாலைகள் உள்ள பகுதி இது. ஆனால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. இதற்கான புதிய திட்டங்கள் உள்ளதா? ஸ்ரீபெரும்புதூர் பாலம் நீண்ட நாட்களாக கட்டப்படாமல் உள்ளது. பணிகளை முடிக்க நடவடிக்கை...
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், பல்வேறு குறைபாடுகளை அரசு உடனடியாக சரி செய்ய அக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசின் அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். கூட்டுறவு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் மலிவு விலை உணவகங்களை...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர் சங்கங்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஈட்டிய விடுப்பு சரண்டர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், ஜாக்டோ ஜியோ மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்நேற்று ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு வெளியிட்டசெய்தியில் கூறியிருப்பதாவது: இந்த...
மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. இதன்படி பாமக, தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே சமீபத்தில் கோவை வந்த பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழகத்தில் பாஜக 15 சதவீதத்துக்கு குறையாமல் வாக்குகளை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.அதன்படி சட்டப்பேரவை தொகுதி அளவில் பணிக்குழு, பூத் கமிட்டி, பிரபலங்களை கட்சியில் இணைப்பது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம்...