Google search engine
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை விசிக தலைவர் திருமாவளவன் தவிர்க்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிய தாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமீபத்திய செயல்பாடுகள், திமுக கூட்டணி யில் குழப்பம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை திருமாவளவன் தவிர்க்க வேண்டும். திமுக கூட்டணியின் வெற்றிக்காக, மாவட்டம்...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,236 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல, ஒகேனக்கல்லில் 6,500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,024 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,236 கனஅடியாக அதிகரித்தது.அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை...
சென்னையில் குடிசைப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட ஏழை மக்கள் வசிக்கும் பெரும்பாக்கம், கண்ணகிநகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும், குடிசைப்பகுதிகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும் பெண்ணுரிமை இயக்கம் சார்பில் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை...
ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் பேசவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கடந்தாண்டு செப்டம்பரில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் டாஸ்மாக் வருமானத்தை தொடர்புபடுத்தி தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் அவதூறாக பேசியதாக விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி,...
மின் வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார் தெரிவித்துள்ளது. கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடிவழக்குகளை பதிவு செய்தனர். எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு...
தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக்.29-ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன்...
சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், ரூ.8 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின், லாட்டரிச் சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்பனை செய்ததன் மூலமாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை சுமார் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அவர் முதலீடு செய்திருப்பதாகவும்...
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித் தடத்தில் நாளை (17-ம் தேதி) காலை 7 முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. எனினும், பயணிகளின் வசதிக்காக அரைமணி முதல் ஒரு மணி நேர இடைவெளியில் காலை 6.15 மணி முதல் மாலை 4.10 வரை...
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பம்பைக்கு விரைவு பேருந்துகள் சேவை நேற்று தொடங்கியது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு...
சாலை விபத்துகளால் ரத்த தான தேவை அதிகரித்துள்ளதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். வி.எச்.எஸ் பன்னோக்கு மருத்துவமனை ரத்த மையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெ.பாலசுப்ரமணியம் நினைவுநாளையொட்டி ரத்த தானம் செய்பவர்கள் மற்றும் நன்கொடை யாளர்கள் அமைப்புகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. வி.எச்.எஸ் ரத்த மையத்தின் இயக்குநர் வி.மைதிலி தலைமை வகித்தார். மருத்துவமனை இயக்குநர் யுவராஜ் குப்தா...