Google search engine
மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் தள்ளாட்டத்தில் உள்ளன. இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சாமானியர்கள் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அரசு மருத்​துவக் கல்லூரி மருத்​துவ​மனைகள், மாவட்ட தலைமை மருத்​துவ​மனைகள், வட்டார மருத்​துவ​மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் அரசு மருத்​துவ​மனைகள் உள்ளன. ஆனால், தினமும் லட்சக்​கணக்கான மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் இந்த மருத்​துவ​மனை​களில் சுமார் 20 ஆயிரம் மருத்​துவர் பணியிடங்கள் மட்டுமே...
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,084 கன அடியாக நீர்வரத்து, நேற்று 9,154 கன அடியாக அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணையில் இருந்து டெல்டா...
விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை, என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டினார். சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த எம்.காளிப்பட்டியில், மேட்டூர் அணை உபரி நீரைக் கொண்டு 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை கொண்டு கொடுத்ததற்காக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமிக்கு, காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு, அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தின் பாராட்டு விழா...
விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ட் ஆலை அமைத்து மல்லிகைக்கு அதிக விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம், கட்டங்குடி, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகைப் பூ சாகுபடி செய்யப்படுகிறது. இவை, அருப்புக்கோட்டை, மதுரை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மாவட்டத்தில்...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4-ம் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை எண்.504-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 தான் குறைத்தது. டீசல் விலையை குறைக்க வேயில்லை. இந்தச் சூழ்நிலையில், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களால்...
 ‘விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக்க சர்வதேச விளையாட்டு நகரம் உதவும்’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான ‘சர்வதேச விளையாட்டு நகரம்’ அமைப்பதற்கான பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். விளையாட்டுத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய...
இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். திருவள்ளுவர், கபீர்தாஸ், யோகி வேமனா ஆகிய மூவரது ஒப்பீடு குறித்த சர்வதேச கருத்தரங்கம், ஆளுநர் மாளிகை சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: திருவள்ளுவர், கபீர்தாஸ், யோகி வேமனா ஆகிய 3 பேரும் வெவ்வேறு இடங்களில் பிறந்தவர்கள். ஆனால், அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையை...
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் போலீஸார் கைது செய்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,...
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் அடையார் இந்திரா நகர் 2-வது அவென்யூவில் குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (நவ.18) இரவு 7 முதல் 19ம் தேதி காலை 5 மணி வரை பள்ளிபட்டு குடிநீர் பகிர்மான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்த செய்யப்படும். அதனால், அடையார் மண்டலத்துக்கு உட்பட்ட சில இடங்களில் குழாய்கள் மூலம்...
சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட மின் தடையால் நோயாளிகள் பாதிக்கப் பட்டனர். சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 300 முதல் 500 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் மின்சாரம் எடுத்துச்செல்லும் கேபிள்களில் நேற்று இரவு 8.30 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து...