எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக, சிலம்பு உட்பட 3 விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி மற்றும் சென்ட்ரலில் நடைமேடை விரிவாக்க பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மூன்று ரயில்களின் சேவையில் தற்காலிமாக மாற்றம் செய்யப்பட்டு, மறுஉத்தரவு வரும் வரை...
நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் நேற்று தெரிவித்தார். இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரைப்பட நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை...
க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழவேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேர் நூல்கள் நாட்டுடைமை: வாரிசுகளுக்கு உரிமை தொகை
admin - 0
க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழ்வேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேரின் நூல் களை நாட்டுடைமையாக்கி. அவர்களின் வாரிசுகளுக்கு நூல் உரிமைத் தொகையான ரூ.90 லட்சத்தை தமிழ் வளர்ச் சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங் கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச் சியில், தமிழறிஞர்கள் ஆறு. அழகப்பன் மற்றும் ராமலிங்கம் என்ற எழில் முதல்வன் ஆகியோருக்கு சிறப்பு நேர்வாக வாழுங்காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காகவும்,...
கடற்கரை - தாம்பரம் இடையே நேற்று காலை முதல் மாலை வரை மின்சார ரயில் ரத்தால், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதற்கு மாற்றாக, இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, அவ்வப்போது மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் நேற்று பராமரிப்பு பணி...
விசிக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏவின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி புரவலர் சைதை எம்.எஸ்.மணி - எஸ்.கன்னிகா பேரனும், விசிக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எம்ஏவின் மகனுமான மருத்துவர் பா.கவுதம் - மருத்துவர் இரா.கீர்த்தி திருமண விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக,...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: வரும் ஜன. 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே, மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் விடுமுறையை கருத்தில் கொண்டு ஜன.10-ம் தேதி முதலே புறப்படத் தயாராவர்.
அரசு பேருந்துகளை பொறுத்தவரை வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்பு தான் இருக்கையை முன்பதிவு செய்ய முடியும்....
பொதுமக்களின் வசதிக்காக, வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைக்கும் நிறுவனங்களை பதிவு செய்யுமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் வீடு, நிறுவனங்கள் போன்றவற்றில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மத்திய அரசு சூரியசக்தி இலவச மின்திட்டத்தின் கீழ் வீடுகளில் ஒரு கிலோ வாட் திறனில் சூரியசக்தி மேற்கூரைகள் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்குகிறது. அதற்கு மேல்...
10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே அங்கீகார தேர்தல்: ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி
admin - 0
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) 43...
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் அதிக அளவில் இடம் பெற்று தனியார் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆண்டுதோறும் காலி பணியிடங்களை முறையாக நிரப்பாததால் அரசு மருத்துவர்கள் பின்தங்கியுள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது.
தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல்கள் https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு...
மத்திய அரசின் 16-வது நிதி ஆணைய குழுவினர் சென்னை வந்த நிலையில், அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மேலும் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் குழுவினர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறது.
மத்திய அரசு 16-வது நிதி ஆணையத்தை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்துள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ் ஆகியோர்...










