கூட்டணியில் எங்களுக்கு தொகுதி எண்ணிக்கை முக்கியம் அல்ல. யார் முதல்வராக வரக் கூடாது என்பதுதான் முக்கியம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாஜகவின் தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு (என்ஜிஓ) சார்பில் சுதேசி, சுயசார்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் ‘வாழ்வாதார அடைக்காப்பகம்’ திட்டத் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
என்ஜிஓ பிரிவின் மாநில அமைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலச்...
‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கு மாணவர்கள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும்: ஆளுநர் வேண்டுகோள்
admin - 0
பெரிய அளவில் கனவு கண்டு, விடாமுயற்சியுடன் செயல்பட்டு, ‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கு, மாணவர்கள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் என்று எஸ்.ஆர்.எம். பல்கலை. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இந்தியக் குடியரசின் 75 ஆண்டுகள் வரலாற்றைப் போற்றும் வகையில், ‘இந்திய குடியரசு - 75 ஆண்டுகள்’ என்ற கருத்தரங்கு, வேந்தர் அருங்காட்சியகம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் பல்கலை....
புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதா? – தலைமைச் செயலக சங்கத்தை எதிர்த்து 200 ஊழியர்கள் முற்றுகை
admin - 0
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தது.
இந்த கூட்டமைப்பில் தலைமைச் செயலக சங்கமும் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற திட்டத்தை அரசு கடந்த 3-ம் தேதி அறிவித்தது.
பழைய ஓய்வூதியத் திட்டம்போல, உறுதியான ஓய்வூதியம், பணிக்கொடை இருப்பதால் இத்திட்டத்தை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் வரவேற்றனர். இதற்கிடையே, அரசு ஊழியர்களிடம்...
‘திராவிட இயக்கத்தின் விதை நாடக மேடைகளில்தான் விதைக்கப்பட்டது’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் ‘நாடகவியல் களஞ்சியம்’ நூல் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நூலை வெளியிட, திரைப்பட இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர்...
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்வதால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தொடக்கக் கல்வித் துறை அறிவித்தது.
இதையடுத்து, இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். 14-வது நாளாக சென்னை...
புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் அரசு கொறடாவுமான அனந்த ராமன் ஏற்பாட்டில் பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்றது.
இதில் காங். கட்சி மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில்...
“எப்ப இலாகா ஒதுக்கப் போறாங்க?” – பாஜக அமைச்சரிடம் புதுவை முன்னாள் முதல்வர் கேட்ட கேள்வியால் கலகலப்பு!
admin - 0
“எப்ப இலாகா ஒதுக்கப் போறாங்க?” என பாஜக அமைச்சரிடம் புதுவை முன்னாள் முதல்வர் நேரடியாக கேள்வி எழுப்பினார்.
திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி ராமனின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜானகி ராமன் உருவப் படத்திற்கு மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸார் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அமைச்சர் ஜான் குமாரும் அங்கு வந்து மலர் அஞ்சலி செலுத்தினார்....
“அதிமுகவுக்கு இருந்த சுதந்திரம் போய்விட்டது. தப்பித் தவறி அவர்கள் ஆட்சி அமைத்தால்கூட அந்த ஆட்சியை பாஜக தான் கட்டுப்படுத்தும்” என்று திருச்சி விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. ஆட்சியில் பங்கு கேட்பது என்பது புதுமையான கோரிக்கை கிடையாது. அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் தங்களுடைய பிரதிநிதித்துவம் இருக்க...
போராட்டத்தைக் கைவிட்டு இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
admin - 0
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரையாண்டு விடுப்புக்கு பின்னர் ஜன.5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது.
12-வது நாளான நேற்று ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாடு களைவதற்கான அரசாணை வெளியிடப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று திட்டவட்டமாக...
கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை கோரி வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
admin - 0
கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் கோரி புதிதாக தொடரப்பட்ட வழக்கில் ஜன.20-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா காலகட்டத்தில் பணியாற்றிய அரசு மருத்துவர் விவேகானந்தன், தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், தனக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கோரியும், ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும் அவரது மனைவி திவ்யா,...
