சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 42 ரிசார்ட்களை மூடி சீல் வைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வனத்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாகச் செயல்படும் ரிசார்ட்களை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனரான கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்.23-ம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2.90 கோடி பெண், 2.78 கோடி ஆண், 7,656 திருநங்கைகள் என மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள...
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் எஸ்.ஐ. உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
அதன்படி, சட்ட விரோத பணப்பரிமாற்றத்தைத் தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையினர் வாகன சோதனை மற்றும் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் போலீஸாரும்...
கோடைக்கால தீ விபத்துகளை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
admin - 0
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படக்கூடிய தீ விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் மற்றும் அரசுத் துறையினர் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளதால், வெப்ப அலை பாதிப்புகள் மற்றும் தீ விபத்துகள் மூலம் உயிர்ச் சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதனைத் தடுக்க பொதுமக்கள்,...
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிகளை அமல்படுத்தும் விதமாக சென்னை விமான நிலையத்தில் சிறப்பு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியான நிலையில், தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன.
2106 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு படைகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், விமான நிலையங்களையும்...
திமுக தொழிற்சங்க ஓட்டுநர்களை வழக்கமான பணிக்கு மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வலியுறுத்தல்
admin - 0
திமுக தொழிற்சங்க ஓட்டுநர்களை வழக்கமான பணிக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக தொழிற்சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர்.
அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடனேயே தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 329 பேருந்து...
வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும் இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்றிதழ்: சுகாதாரத் துறை திட்டம்
admin - 0
வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும், இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்றிதழ் வழங்குவதை செயல்படுத்த தமிழக பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 6.96 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அதில், 23 சதவீதம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதும், 73 சதவீதம் வீடுகளிளும் நடக்கிறது. 4 சதவீதம் எதிர்பாராத விபத்துகள் காரணமாக உள்ளது.
இந்நிலையில், இறப்புக்கான முழுமையான காரணங்களை கண்டறிந்து, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள்...
தமிழகத்தில் 8.65 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க படிவம் விநியோகம்
admin - 0
தமிழகத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 8.65 லட்சம் பேர் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்குச்சாவடிக்கு வர முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே தபால் வாக்கு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு, தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 5 நாட்களுக்குள் தொடர்புடைய தொகுதி...
விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட, மாநிலஅரசுகள் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலா மணி வெளியிட்ட அறிக்கை: கேரள மாநில எம்.பி. ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த மத்திய நிதித்துறை அமைச்சகம், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள...
“பெண்களை இழிவு படுத்துவதை தயவு செய்து இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த பெண் சக்தியைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுப்பேன்” என, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர்...










