Google search engine
போலி தூதரக சான்றிதழ் சமர்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது. அதில் எந்தவிதமான முறைகேடுகளும் நிகழாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒரு பகுதியாக, மாணவர்களின்...
லாரி​யில் ரகசிய அறை அமைத்து, ஆந்திரா​வில் இருந்து பேராவூரணிக்கு 330 கிலோ கஞ்சாவை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி​யில் தனிப்படை போலீ​ஸார் நேற்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்​டிருந்​தனர். அப்போது, பேராவூரணி​யில் இருந்து முடச்​சிக்​காடு பகுதியை நோக்​கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனை​யிட்​ட​தில், டீசல் டேங்க் அருகில் ரகசிய அறை அமைத்து, 330 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்​திருந்தது தெரிய​வந்​தது. இதையடுத்து, லாரியை பின்​தொடர்ந்து...
உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவனின் வருடாந்திர மார்கழி இசைத் திருவிழா-2024 தொடக்க நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவைத் தொடங்கி வைத்து ‘கதா கலாஷேபம்’ எனும் நூலை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது: மார்கழி மாதம் இசைக்கும், ஆன்மிகத்துக்கும்...
கரோனாவால் உயிரிழந்த முன்​களப் பணியாளர்​களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வலியுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக​வின் தேர்தல் அறிக்கை​யில் “பணி​யில் இருந்த​போது கரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்​துவர்​கள், மருத்​துவம் சார்ந்த பணியாளர்​கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்​கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்​களின் குடும்பத்​தா​ருக்கு உரிய இழப்​பீடு வழங்​கப்​படும்” என்று குறிப்​பிட்​டுள்​ளனர். ஆனால்,...
அடுத்த 2025-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை​களுடன் 24 நாட்கள் அரசு விடு​முறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்​துள்ளது. ஆண்டு​தோறும், தமிழக அரசின் சார்​பில் சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமைகள் அரசு விடு​முறை நாட்கள் தவிர, இதர பொது விடு​முறை தினங்கள் அறிவிக்​கப்​படும். அந்த வகையில், அடுத்த 2025-ம் ஆண்டுக்கான அரசு விடு​முறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, செலாவணி முறிச்​சட்​டத்​தின் அடிப்​படை​யில், தமிழக அரசின் கட்டுப்​பாட்​டின் கீழ் உள்ள அனைத்து...
மருத்​துவக் கல்லூரி​களில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை கேட்டு யாரும் ஏமாற வேண்​டாம் என்று சுகா​தாரத் துறை அமைச்சர் மா.சுப்​பிரமணியன் எச்சரித்துள்​ளார். சென்னை - சைதாப்​பேட்டை பெண்கள் மேல்​நிலைப்​பள்​ளி​யில் ‘ஊட்​டச்​சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்​றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்​பிரமணியன் தாய்​மார்​களுக்கு ஊட்டச்​சத்து பெட்​டகங்களை வழங்​கினார். ஒருங்​கிணைந்த குழந்தை வளர்ச்​சித் திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கவுன்​சிலர்கள் த.மோகன்​கு​மார், சுப்​பிரமணி உள்ளிட்​டோர் உடன் இருந்​தனர். அப்போது,...
தமிழ்ப் பல்கலைக்​கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வு​பெற்ற நீதிபதி தலைமை​யில் விசா​ரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தர​விட்​டுள்​ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்​தின் 13-வது துணைவேந்​தராக வி.திரு​வள்​ளுவன் 2021-ம் ஆண்டு டிச.11-ம் தேதி பொறுப்​பேற்​றார். இவரது பணிக்​காலம் டிச. 12-ம் தேதி​யுடன் நிறைவடைய உள்ள நிலை​யில், தமிழக ஆளுநரால் நேற்று முன்​தினம் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டார். 2017-2018-ம் ஆண்டில் பல்கலைக்​கழகத்​தில் துணைவேந்​தராக பாஸ்​கரன் இருந்த​போது, பேராசிரியர்,...
மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 9,269 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,355 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 107.91 அடியில் இருந்து 108.32 அடியாகவும், நீர் இருப்பு 75.47 டிஎம்சியில் இருந்து 76.04 டிஎம்சியாகவும் உயர்ந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 19-ம்...
இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறை​யாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் கூறினார். சேலம் சுகவனேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த பொன்​.​மாணிக்க​வேல், பின்னர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்​திலிருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்​கப்​படு​கிறது. கோயில் கணக்​குகளை தணிக்கை...
முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் பணத்தை வைத்து சசிகலா, டிடி​வி.​தினகரன் என ஆயிரம் குடும்​பங்கள் கோடீஸ்​வரர்​களாகி​விட்​டனர் என்று அதிமுக முன்​னாள் அமைச்சர் திண்​டுக்கல் சீனிவாசன் கூறினார். நாகை மாவட்ட அதிமுக அலுவல​கத்​தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்​றது. முன்​னாள் அமைச்​சர்கள் திண்​டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓ.எஸ்​.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்​றனர். கூட்​டத்​தில் திண்​டுக்கல் சீனிவாசன் பேசி​ய​தாவது: முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தாவுக்கு உதவியாக வந்தவர்​கள்​தான் சசிகலா, டிடி​வி.​தினகரன் உள்ளிட்​டோர். ஆனால், அவர்​கள், அவர்​களைச் சேர்ந்​தவர்கள்...