Google search engine
கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின்...
நவ.26, 27-ல் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (நவ.25) காலை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள பதிவில், “டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.25) இரவு தொடங்கி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 26. 27-ல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் பகுதிகள் 26,...
மின்சார ரயில்கள் ரத்து, நேரம் மாற்றம் காரணமாக பிராட்வே-செங்கல்பட்டு இடையே கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இடங்களிலிருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதுடன் 28 ரயில்கள் தற்காலிகமாக ரத்தும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,...
ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது டிஜிபி அலுவலகத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. பம்மல் இரட்டைப் பிள்ளையார் கோயில் அருகே கடந்த 15-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி தாம்பரம் யாகூப், பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பாஜக மாநில...
தென்னிந்தியாவில் முதல்முறையாக சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.18.18 கோடியில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல், தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறி்த்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குறு, சிறு, நடுத்தர தொழில் புரிபவர்களின் உற்பத்தி திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், வளர்ந்து வரும் தொழில் பிரிவுக்குள் அவர்கள் நுழைய வகை செய்யவும், தமிழகத்தில் 5 இடங்களில் ரூ.100 கோடியில் மெகா கிளஸ்டர் திட்டம்...
வீட்டு மனை முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு சென்னை திருவான்மியூரில் வீட்டு மனைகளை மாநில அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி,...
சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்யவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி...
அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்பதற்கு தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மின்வாரியம் தொடர்பான எவ்வித ஒப்பந்தமும் அதானி குழுமத்துடன் செய்யப்படவில்லை என்ற தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதானி குழுமத்துக்கும், தமிழக அரசுக்கும்...
செங்​கல்​பட்டு அருகே பாபுராயன்​ பேட்​டை​யில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ விஜய வரதராஜர் கோயி​லில் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க அறநிலையத் துறைக்கு உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் பி. ஜெகந்​நாத் தாக்கல் செய்திருந்த மனுவில், “செங்​கை மாவட்டம் பாபுராயன்​ பேட்​டை​யில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ விஜய வரதராஜர் கோயில் அறநிலையத் துறை​யின் கட்டுப்​பாட்​டில் உள்ளது. வடகலை வைணவ சம்பிர​தாயப்படி இந்த...
தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்களை விரைவாக நியமிக்க அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தினமும், ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் கருத்து கேட்டு மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்யும் பணியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். பெரும்பாலும், விஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்களில், சிறப்பாக கட்சி பணி செய்தோருக்கு...