Google search engine
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி டிச.12-ல் தர்ணா போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வுகால பணப்பலன், மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். அனைத்து துறையின் ஓய்வு பெற்றவர்களும் அகவிலைப்படி உயர்வு பெறும்போது, போக்குவரத்து துறையில் மட்டும் 9 ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படுகிறது....
தேசிய மாணவர் படை தினத்தையொட்டி, சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய இளைஞர் அமைப்பாகிய தேசிய மாணவர் படை (என்சிசி) அமைப்பு 1948-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன் 76-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல்...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில்...
முறையாக பணிபுரியாத வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை நீக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமை...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, டெல்லிக்கு புறப்பட்டு சென்ற திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது; நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தமிழக பிரச்சினை, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி போன்றவற்றை தொடர்ந்து வலியுறுத்துவோம். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் இந்தியை திணித்துக் கொண்டு இருக்கிறது. பொங்கல் நாளில், சிஏ பவுண்டேஷன்...
சிட்டுக்​குருவிகளை பாது​காக்​கும் நோக்​கில் கூடுகள் தயாரித்து, மக்களுக்கு வழங்கி வரும் சென்னையை சேர்ந்த ‘கூடு​கள்’ அறக்​கட்​டளைக்கு ‘மனதின் குரல்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பாராட்டு தெரி​வித்​தார். பிரதமர் நரேந்திர மோடி​யின் 116-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில், சிட்டுக்​குருவி குறித்து அவர் பேசி​ய​தாவது: அனைத்து மொழிகள், கலாச்​சா​ரத்​தி​லும் சிட்டுக்​குருவி பற்றிய சம்பவங்​கள், கதைகள் உள்ளன. நகரங்​களில் தற்போது மிக அரிதாகவே சிட்டுக்​குருவிகாணப்​படு​கிறது. இந்த...
இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையிலான 3-வது வழித்​தடத்​தில் ஒரு பகுதி​யாக, அயனாவரத்​தில் இருந்து பெரம்​பூர் நோக்கி "கல்​வ​ராயன்" இயந்​திரம் சுரங்கம் தோண்​டும் பணியில் ஈடுபட்​டுள்​ளது. இந்த இயந்​திரம், வரும் ஜனவரி இறுதி​யில் இலக்கை அடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 28 சுரங்க ரயில் நிலையங்கள் சென்னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 116.1 கி.மீ....
அதானி மீது திமுக பாசத்தை பொழிவதாகவும், கவுதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாகச் சந்தித்தது பேசியது ஏன்? என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் நண்பரும், முன்னணி தொழிலதிபருமான கவுதம் அதானி, ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலாக லஞ்சம் கொடுத்து அமெரிக்காவில் முதலீடுகளை திருடியது அம்பலமாகிய நிலையில், அந்நாட்டு அரசு அதானி உள்ளிட்டோரை கைதுசெய்ய...
விரைவில் வெளியாக உள்ள ரயில்வேயின் புதிய கால அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் அந்த்யோதயா ரயிலின் நேரத்தை அரைமணி நேரம் முன்னதாக மாற்றி அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புதிய கால அட்டவணை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான புதிய கால அட்டவணை தள்ளிவைக்கப்பட்டு, வரும் ஜன.1-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் விரைவாக செய்து...
இந்திய விவசாயிகளின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த குழு பரிந்துரை செய்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020-ம் ஆண்டு நவம்பர் 26 முதல் 13 மாதங்களாக டெல்லி உட்பட இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வந்த நிலையில், மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால்,...