விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்: சென்ட்ரல், தாம்பரத்தில் இருந்து இயக்கம்
admin - 0
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும், தாம்பரத் தில் இருந்து செங்கோட்டை வழியாக கொச்சுவேலிக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரலில் இருந்துசெப்.6-ம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(06151) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.45 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும். மறுமார்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து செப்.8-ம் தேதி இரவு 11.30 மணிக்கு...
“திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்” – முதல்வர் ஸ்டாலின்
admin - 0
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்” என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும்...
தமிழகத்தில் போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பது தெரியாதா? – போலீஸாருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
admin - 0
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது போலீஸாருக்குத் தெரியாதா? என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2017-ம் ஆண்டு ‘பெண்ணுரிமை இயக்கம்’ என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், ‘‘குடிசைவாசிகளுக்கு கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு கல்வி,...
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: சட்ட நிபுணர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
admin - 0
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநாடு தொடர்பாக சட்ட நிபுணர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே கடந்த மாதம் கட்சிக் கொடி மற்றும் பாடலையும் அறிமுகம் செய்தார். அந்த நிகழ்விலேயே விரைவில் மாநாடு நடைபெறும் எனவும்...
பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து 3 முறை...
சென்னையில் அமைகிறது இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்
admin - 0
ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம் நிறுவுவதற்கும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:...
கல்பாக்கம் சுற்றுப்புற கடலோர பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஒத்திகை: ஈசிஆர் சாலையில் தீவிர வாகன சோதனை
admin - 0
கல்பாக்கம் மற்றும் சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட கடலோர கிராமப் பகுதிகளில் சாகர் கவாச் ஒத்திகையாக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈசிஆர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக, ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் இணைந்து சாகர் கவாச் எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை 4 மற்றும்...
“தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டம் குறித்த ஆளுநரின் கருத்து தவறானது” – முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி
admin - 0
“தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது,” என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் பள்ளிக்கல்வி பாடத்திட்டம் மிகவும் மோசமானது. மற்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தை விட மிகவும் தாழ்வானது. தமிழக மாணவர்கள் இதர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது. தமிழக பாடத்திட்டம் 2017-18-ம் ஆண்டில், அப்போதைய...
''கோயில்களில் பிரசாதங்களை அறநிலையத் துறையே தயாரித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும். கோயில்களை வணிக நோக்கத்துக்கான இடமாக கருதக் கூடாது'' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரசாத கடை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி திருச்சியைச் சேர்ந்த வைத்தியநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி இன்று விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில்,...
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மேற்கு மாநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வட்டச் செயலாளர்கள், “கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. கட்சியிலிருந்து என்ன பயன்? இந்தக் கட்சியில் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்” என தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.
திருச்சி மேற்கு மாநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இன்று (செப்.2) நடைபெற்றது. அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமை...










