Google search engine
தமிழகத்தில் கனிமவளத் துறையில் பலகோடி ரூபாய்க்கு நிதி முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த மோசடியை தடுக்க மாநில அளவில் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என துறை அலுவலர்களே கோரிக்கை விடுத்துள்ளனர். கனிமவளத் துறையில் திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களைப் போல், மாநில அளவில் பல கோடி ரூபாய்க்கு நிதி முறைகேடு நடந்துள்ளதை தடுக்க சிறப்புக் குழு அமைப்பது குறித்து, இத்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில்...
அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல அரசின் தூதுவர்களாக பெண்கள் இருக்க வேண்டும்’ என அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார். தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,874 கோடியில் வங்கிக்கடன் இணைப்புகள் வழங்குதல், 12,233 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உட்பட 22 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை யா.ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தலைமைவகித்தனர்.இவ்விழாவில் அரசின்...
தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அதிக அளவில் நிறுவனங்களை தொடங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நோக்கியா உள்ளிட்ட 6...
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புபடுத்தி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக மதுரை சைபர் கிரைம் போலீஸார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலஜே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனது கருத்துக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரியும் பிரமாணப்...
 தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை சமூகவலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத்...
அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார். அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. மாணவிகள் அழகாக இல்லாததற்கு...
சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும்; அதன் கீழ் நுண் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதியும் மனித வளமும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மனித உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாகத் திகழும் காற்று மாசுவைத் தடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு நாளும் செப்டம்பர் 7-ஆம் நாள் நீல வானுக்கான...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மா.கவுதமன்,...
இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ‘அரசியல், அதிகாரம் உள்ளிட்டவற்றில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தடைகளை உடைத்து வளர்ச்சியடையும் பெண்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கத்துக்கு இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சென்னை மகளிர் பிரிவுதலைவர் திவ்யா அபிஷேக் தலைமை தாங்கினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் தன்னை சிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக அமலாக்கத்துறை, திஹார் சிறை நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில்கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறையும் கைது செய்து சிறையில் அடைத்தது.இந்த வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது...