Google search engine
அமெரிக்க தேர்தல் முடிவு எதி ரொலியாக நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த...
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் நவம்பர் புரட்சி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நவம்பர் புரட்சி எனப்படும் ரஷ்யபுரட்சி தின விழா சென்னை தி.நகரில்உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:பாஜக அரசு கடைபிடிக்கும் பொருளாதார கொள்கை மக்களை கடுமையாக பாதிக்கிறது. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது....
மருத்துவக் கவுன்சிலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள், விதிகளுக்கு புறம்பாக தொடர்ந்து பணியாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மருத்துவக் கவுன்சில் பதிவாளர் டாக்டர் காமராஜ் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மருத்துவ அலட்சியம், நெறியற்ற கட்டண விதிப்பு, தொழில்சார்ந்த தவறுகள், முறைகேடுகள் என பல்வேறு புகார்கள் டாக்டர் எஸ்.தினேஷ் (பதிவு எண் 61971) என்பவர் மீது முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் அந்த...
சுகாதாரத் துறையில் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, மருந்துகள் இருப்பு இல்லை என பழனிசாமி, சீமான் பொய் பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தில் இதுவரை ரூ.261.46 கோடி செலவில் 3 லட்சம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் 3 லட்சமாவது பயனாளியை சுகாதாரத் துறை அமைச்சர்...
பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் சிறப்பு காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், ‘ப்ளூ’ வைரஸ்களால் பரவும், இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், டெங்கு, நுரையீரல் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் புறநோயாளிகளாக...
கனமழை காரணமாக திருவாரூரில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதலே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை...
திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் இடைத்தரகராக பணியாற்றி பொது மக்களிடம் லஞ்சப் பணத்தை அவ்வப்போது வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அழகேசன்...
அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை மதுரை அல்லது திருச்சியில் நடத்த திமுக தலைமை ஆலோசித்து வருகிறது. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் திமுக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில், பல மாதங்களுக்கு முன்னதாகவே, தேர்தல் ஒருங்கிணைப்பாளர் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். குறி்ப்பாக, கட்சியில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை...
தெரு நாய்கள் கடித்ததால் உயிருக்கு போராடிய குரங்கு குட்டிக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர், வண்டலூர் பூங்காவில் உள்ள அந்த குட்டியைப் பார்வையிட அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கால்நடை மருத்துவர் ஏ.வல்லயப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் கடந்த 2023 டிசம்பர் 4-ம் தேதி நடந்தது. தெருநாய்கள் கடித்ததால் காயமடைந்த ஒரு...
அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்டம் தோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதிக அளவில்...