எல்லை தாண்டி வந்ததாக குற்றம்சாட்டி, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் 3,000 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெயராஜ், ராஜா, கீதன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர்...
அதிமுக களஆய்வுக் குழுவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக களஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு’ ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.
கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள கட்டமைப்புகளின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக...
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்
admin - 0
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும். இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியரின்கீழ் தனி நிதியம் ஏற்படுத்தி, அதற்கு முதல்கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே பட்டம்புதூரில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், 57,556 பயனாளிகளுக்கு ரூ.417 கோடி மதிப்பிலான நலத்திட்ட...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றொரு...
கழிவு நீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக நெல்லையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று தாமிரபரணியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர், நீதிமன்ற உத்தரவை மீறி, தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, நதியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கை குறித்து...
‘அமானுஷ்யம் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவர் இந்திரா சவுந்தரராஜன்’ – தலைவர்கள் புகழஞ்சலி
admin - 0
மதுரை / சென்னை: பிரபல எழுத்தாளரும், ஆன்மிகச் சொற்பொழிவாளருமான இந்திரா சவுந்தரராஜன் (66) மதுரையில் நேற்று காலமானார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மதுரை டிவிஎஸ் நகரில் வசித்த இந்திரா சவுந்தரராஜன், சில காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று காலை குளியல் அறையில் வழுக்கி கீழேவிழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை...
போக்குவரத்து வசதியற்ற மலைகிராம மக்களுக்கு மருத்துவ சேவை: 25 இருசக்கர ஆம்புலன்ஸ்களை ரூ.1.60 கோடியில் வாங்க தமிழக அரசு உத்தரவு
admin - 0
அணுக கடினமான, போக்குவரத்து வசதியற்ற மலைகிராமங்களில் வாழும் மக்களுக்காக, ரூ.1.60 கோடி மதிப்பில் 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு: அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ.1.60 கோடி செலவில்...
சென்னை பல்கலை. முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு
admin - 0
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இந்தாண்டுக்கான கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஆண்டுதோறும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மா.செல்வராசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்,...
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் 70-வது பிறந்தநாள் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பிறக்கும் புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கும் கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு, பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் மக்கள் நீதி மய்யத்தின்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே விட்டுவிட்டு மழை பெய்துவந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி மணலி புதுநகரில் 11 செ.மீ, மாதவரத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம்...










