மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் வலியுறுத்தல்
admin - 0
இந்தியா - இலங்கை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று இலங்கை அதிபரின் செயலர் கலாநிதி நந்திக குமாநாயக்கவிடம் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் 61 தமிழக படகுகளை சிறைபிடித்து, 450 மீனவர்களை இலங்கைகடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் 88 மீனவர்களுக்கு6 மாதம் முதல் 2 ஆண்டு வரைதண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறைபிடிக்கப்படும்...
போக்சோ வழக்கில் புலன் விசாரணையின்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பை, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா தொடங்கி வைத்தார். இதில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீஸார் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கீழ்ப்பாக்கம்...
மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காக 10 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
உலக மாற்றுத் திறனாளிகள் தினம் வரும் டிச.3-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நடைபெறும் விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில், சிறந்த பணியாளர்,...
கல்வியில் அரசியலை கலக்கக் கூடாது என்றும், பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களின் 223-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆளுநரின்...
தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோயம்புத்தூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதுதவிர, தாம்பரம் - கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களில் முக்கிய நாட்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.29-ம் தேதி புறப்படும் சிறப்பு ரயிலில் (06001) டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. இதற்கடுத்து காத்திருப்போர் பட்டியலும் முடிந்து, ‘ரெக்ரெட்’...
சோழர்கள் காலத்திலிருந்தே இருந்தாலும்கூட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
admin - 0
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வந்தாலும்கூட அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை அருகே திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல்...
எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்படுத்திய சிபிசிஎல்-க்கு ரூ.73 கோடி அபராதம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
admin - 0
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டபோது மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய் படலம் பரவியது. இது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. எண்ணெய் படலம் படிந்து பறவைகளும் பாதிக்கப்பட்டன. மேலும் மீன்பிடி படகுகள், வலைகள் மீது பிசின் போன்ற கரிய நிற பெட்ரோலியக்கழிவு படிந்து...
முதல்வர், துணை முதல்வர் மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதி வேண்டும் – ஆளுநரிடம் பாஜக கோரிக்கை
admin - 0
தமிழக முதல்வர், துணை முதல்வர் இனவாத கருத்துகளை பரப்புவதால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆளுநரிடம் தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்மையில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில்ஒரு வரி விடுபட்டது...
மெரினா லூப் சாலை மேற்கு பகுதியில் மீன் விற்க அனுமதி: நொச்சிக்குப்பம் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
admin - 0
மெரினா லூப் சாலை மேற்கு பகுதியில் மீன் விற்க அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதாக நொச்சிக்குப்பம் மீனவர்கள் அறிவித்தனர்.
சென்னை, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில், லூப் சாலை மீனவர்களில் ஒரு பகுதியினருக்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சந்தையில் கடைகள் வழங்கப்பட்டன. மற்றொரு பகுதியினருக்கு கடைகள் ஒதுக்காத நிலையில், அப்பகுதியில் வியாபாரம் செய்யத் தடையும் விதிக்கப்பட்டது.
இதனால் கடந்த 21-ம் தேதி முதல் நொச்சிக்குப்பம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்....
பண மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்; மேலும் 50 பேருக்கு சம்மன்
admin - 0
பண மோசடி வழக்கின் விசாரணைக்காக சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். இந்த வழக்கில் மேலும் 50 பேருக்கு சம்மன் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3...










