தமிழகம் முழுவதும் இன்றுமுதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கிளாம்பாக்கத்தில் அமைச்சர்கள் ஆய்வு
admin - 0
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 28-ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறைநடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பேருந்துகளுடன் சென்னையில்...
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி; ஆளுங்கட்சி அத்துமீறலை தடுக்க வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
admin - 0
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நாளை (அக்..29) நடைபெற உள்ளது. இப்பணியில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் தெரியவந்தால் அதைத் தடுக்க அதிமுகவினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, அடுத்த ஆண்டுஜன.1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெற உள்ளது. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் நாளை...
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களில் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து சென்றுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்...
தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் ஆர்வமாக கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் திரளாக தீவுத்திடலுக்கு வந்தனர்.
அதனால் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பெரியதும் சிறியதுமான பட்டாசு நிறுவனங்கள் தீவுத்திடலில் ஸ்டால்கள் அமைத்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் பட்டாசுகள் வாங்கும் நிலை உள்ளது.
சில்லறை விலையில் மட்டுமல்லாமல் மொத்தமாகவும் பட்டாசுகளை வாங்க முடிகிறது. பட்டாசு கிப்ட் பாக்ஸ்...
அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின்கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 1,309 ரயில் நிலையங்கள் படிப்படியாக மேம்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் 116 நிலையங்கள் மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 25 ரயில் நிலையங்களும், இரண்டாவது கட்டமாக 44...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை ஜவுளி கடைகளில் குவிந்த மக்கள்: பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்
admin - 0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க நேற்று தி.நகர் உட்பட வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சென்னையில் நேற்று 18 ஆயிரம் போலீஸார் கண்காணிபு பணியில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நேற்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் புத்தாடை, நகை, பட்டாசு வாங்க வணிக வீதிகளில் ஒரே...
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அடுத்த 3 மாதங்களில் ‘கலைஞர் நூலகம்’ – துணை முதல்வர் உதயநிதி தகவல்
admin - 0
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ என்ற பேச்சுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதன்பிறகு, செய்தியாளர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி, திராவிட...
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் நேற்று முன்தினம் மாலை முதலே மாநாட்டு திடலை நோக்கி வரத்தொடங்கினர்.
காலை...
ஆரியம் – திராவிடம் இன கோட்பாடு உண்மையா, பொய்யா? – மத்திய, மாநில அரசு முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவு
admin - 0
சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் தாக்கல் செய்தமனுவில், ‘‘ஆரியன், திராவிடன் என உலகில் இரு மனித இனங்கள் உள்ளன எனக் கூறி மக்களை பாகுபாடு செய்கின்றனர். ஆனால் உண்மையில் அப்படி எந்தவொரு இனக்குழுக்களும், இனக்கோட்பாடும் இல்லை. இரண்டுமே தவறானது.
ஆனால் தமிழக அரசு மாணவர்கள் மத்தியில் நஞ்சை விதைக்கும் விதமாக இந்த பொய் பிரச்சாரத்தை பாடநூல்களி லும் வைத்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டும். எனவே...
பேரவை தேர்தல் பணி குறித்து ஆலோசிக்க அக்.28-ல் திமுக தொகுதி பார்வையாளர் கூட்டம்: ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது
admin - 0
சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான திமுக பல்வேறு முன்னேற்பாடுகளை கடந்த பல மாதங்களாகவே செய்து வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்ததுமே, சட்டப்பேரவை தேர்தலுக்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு,...










