Google search engine
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இன்று (டிச.4) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது. சென்னையில் 38 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ரயில்வேயில் முதல்முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) 43 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு, செயல்படுகிறது. கரோனா...
மாற்றுத் ​திறனாளி இசைக் கலைஞர்களை கவுர​வப்​படுத்​தும் வகையில் மாற்றுத் திறனாளி​களுக்கான இணை இசைத் திரு​விழா மியூசிக் அகாட​மி​யின் சிற்​றரங்​கத்​தில் நேற்று முன்​தினம் நடந்​தது. ‘தி இந்து’ குழும பதிப்​பகத்​தின் இயக்குநரும், மியூசிக் அகாட​மி​யின் தலைவருமான என்.​முரளி விழா​வைத் தொடங்கி​வைத்து பேசி​ய​தாவது: ஸ்டெர்​லிங் நிறு​வனம் மற்றும் ரோட்டரி சங்கம் மெட்​ராஸ் கோர மண்டல் முன்​முயற்​சி​யில் இந்த இணை இசைத் திரு​விழா நடக்​கிறது. விருது பெற்ற கலைஞர்களை தேர்ந்​தெடுத்​திருக்​கும் ரோட்டரி சங்கம் மெட்​ராஸ்...
கார்த்திகை மாத முகூர்த்த தினத்தில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு, டிச.5-ம் தேதி பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுபமுகூர்த்த தினங்களில், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்று, பதிவுக்கான கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். தற்போது கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான டிச.5-ம் தேதி (நாளை)...
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக முதலாமாண்டு மாணவர் புகார் செய்ததால், கல்லூரி நிர்வாகம் விசாரித்து அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி, முதலாமாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர் ஒருவர், பல்கலைக்கழக மானியக் குழுவின் ராகிங் தடுப்புப் பிரிவுக்கு கடந்த 26-ம் தேதி புகார் ஒன்றை இமெயில் மூலம் அனுப்பியிருந்தார். அதில், செயல்முறை பாட கையேடுகளை...
அரசு கல்லூரிகளில் தேவைக்கேற்ப கூடுதலாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் ‘விளைவுகள் அடிப்படையிலான கல்வி’ என்ற தலைப்பிலான பயிலரங்கம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது: உயர்கல்வித் துறையில் தமிழக அரசு பல்வேறு புதுமைகளை செய்துவருகிறது. மாணவர்களின் எதிர்கால நலனைக்...
சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் இன்று (டிச.4) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரியனை ஆராய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட்...
சூர்யா நடிப்​பில் சமீபத்​தில் வெளியான ‘கங்​குவா’ படத்​துக்கு சமூக வலைதளங்​களில் எதிர்​மறையான விமர்​சனங்கள் எழுந்தன. இந்நிலை​யில் புதிதாக வெளி​யாகும் தமிழ்ப் படங்களை முதல் 3 நாட்​களுக்கு விமர்​சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப தடை விதிக்​கக்​கோரி, நடப்பு தமிழ் திரைப்பட தயாரி்ப்​பாளர்கள் சங்கம் சார்​பில் அதன் பொதுச் செயலாளர் டி.சிவலிங்கம் என்ற சிவா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​தார். அதில், ‘‘சமீப​காலமாக புதிதாக வெளி​யாகும் திரைப்​படங்களை யூ-டியூப்...
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் குடியிருப்பில் சூழ்ந்த வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. அதேவேளை யில் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் பல கிராமங்களில் பாதிப்பு நீடித்து வருகிறது. சாத்தனூர் அணையில் நேற்று முன்தினம் விநாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடலூர் தென்பெண் ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாழங்குடா, குண்டு உப்பலவாடி, பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம், திடீர்குப்பம்,...
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட திடீர்குப்பம், ஆல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த மக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், “சாத்தனூர் அணை திறப்பதில் அரசு எந்தவித முன் ஜாக்கிரதையும் மேற்கொள்ளவில்லை. அதனால் கடலூரில் பெரும் சேதம் ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல. மிக்ஜாம் புயலுக்கு ரூ.6,000 வழங்கிய தமிழக...
விழுப்புரம் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி நிலங்கள் சேதமடைந்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சேறு வீச்சு சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி நேற்று மாலை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 55 சென்டிமீட்டரும், விழுப்புரம் நகரில் 63.5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 67 நிவாரண முகாம்களில்...