Google search engine
மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்​கான படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப புதிய மருத்​துவ பணி​யிடங்​கள் உள்​ளிட்ட கோரிக்​கைகளுக்​காக அரசு மருத்துவர்கள் நீண்​ட​கால​மாக போராடி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், கடந்த 12-ம் தேதி​யில் இருந்து ஒரு​வாரமாக கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் சுமார் 20 ஆயிரம் மருத்துவர்கள் கோரிக்​கைகள் அடங்​கிய அட்டை...
கருவிழி ஒளி வில​கல் அறுவை சிகிச்​சைக்​கான சர்​வ​தேச மருத்​துவ அமைப்​பில் (ஐஎஸ்​ஆர்​எஸ்) உலகம் முழு​வதும் 90 நாடு​களை சேர்ந்த லட்​சக்​கணக்​கான மருத்​துவ வல்​லுநர்​கள் உறுப்​பினர்​களாக உள்​ளனர். இந்த அமைப்​பின் தலை​வ​ராக டாக்​டர் அகர்​வால்ஸ் மருத்​து​வ​மனை​யின் முது​நிலை மருத்​துவ நிபுணர் சூசன் ஜேக்கப் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார். ஐஎஸ்​ஆர்​எஸ் அமைப்​பின் தலைமை பொறுப்​பில் அகர்​வால்ஸ் மருத்​துவ குழு​மத்​தின் தலை​வர் மருத்​து​வர் அமர் அகர்​வால் ஏற்​கெனவே இருந்​துள்​ளார். அவருக்கு அடுத்​த​படி​யாக தற்​போது இந்த கவுர​வம், மருத்​து​வர்...
பு​திய பாரத எழுத்தறிவுத் திட்​டத்​தில் சிறப்​பாக செயல்​பட்ட 342 மையங்​களுக்கு அமைச்​சர் அன்​பில் மகேஸ் சிறப்பு விருதுகள் வழங்கி கவுர​வித்​தார். நாடு முழு​வதும் கல்வி கற்​காத 15 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​களுக்கு தன்​னார்​வலர்​களை கொண்டு அடிப்​படை எழுத்தறிவு பயிற்​று​ விப்​ப​தற்​காக மத்​திய அரசால் ‘பு​திய பாரத எழுத்தறிவுத் திட்​டம்’, 2022-ம் ஆண்டு அறி​முகம் செய்​யப்​பட்​டது. இந்த திட்​டத்​தின்​கீழ் 2027-ம் ஆண்​டுக்​குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்​பிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் பள்​ளி​சாரா...
சென்​னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில், பிற​விலேயே காது கேளாத குழந்​தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்​தும் சிகிச்​சை​யின் 20-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடை​பெற்​றது. விழா​வில், சிகிச்சை பெற்ற குழந்​தைகள் ஆடல், பாடல் மற்​றும் பல்​வேறு கலை நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. ராமச்​சந்​தி​ரா​வின் முதல் காக்ளியர் கருவி பொருத்​தும் அறுவை சிகிச்​சையை 3 வயதில் செய்து கொண்ட, முதுகலை பட்​டப்​ படிப்பு படித்து வரும்...
தமிழக பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கடந்த ஜனவரி 3-ம் தேதி அரசு ஊழியர் சங்​கங்​களின் போராட்​டத்​தின் போது, தமிழக அரசு அறி​வித்த புதிய அறி​விப்​பு​களில் சத்துணவு ஊழியர்​களின் கோரிக்​கைகள் முற்​றி​லு​மாகப் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளன. அரசுடன் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வி​யில் முடிந்​த​தால், 71 ஆயிரம் சத்துணவு ஊழியர்​கள் கால​வரையற்ற வேலைநிறுத்​தம் மற்​றும் மறியல் போராட்​டத்​தில் ஈடு​படு​கின்​றனர். 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, சத்துணவு ஊழியர்​களுக்கு கால​முறை ஊதி​யம், பணிக்​கொடைத் தொகை ரூ.5...
‘கருத்துச் சொல்லலாம் வாங்க’ என கட்சியினரை கரிசனத்துடன் தலைநகருக்கு அழைத்திருந்தது கதர் கட்சி. அதுசமயம், மக்கள் பிரதிநிதிகளிடம் தனித்தனியே கருத்துக் கேட்டாராம் இளம் தலைவர். ‘சீமை’ மாவட்டத்திலிருந்து ‘சிறப்பான’ ஏற்பாட்டுடன் போயிருந்த மக்கள் பிரநிதி ஒருவர். “சூரியக் கட்சியுடன் இருப்பது தான் நமக்குப் பாதுகாப்பு” என்று தன்னை உருவாக்கிவிட்ட தலைவரின் கருத்தை அப்படியே பிரதிபலித்தாராம். அவரை கிராஸ் செக் செய்த இளம் தலைவர், “அப்படியா... உங்க அசெம்ளி தொகுதியில் உள்ளாட்சி...
கல்வி நிறுவன வளாகங்​களில் இருக்​கும் தபால் நிலை​யங்​களை அஞ்​சல் துறை புதுப்​பித்து வரு​கிறது. அந்த வகை​யில், சென்னை கிண்டி ஐஐடி வளாகத்​தில் உள்ள துணை தபால் நிலை​யம் அடுத்த தலை​முறை​யினரின் பயன்​பாடு​களுக்கு ஏற்ப, ‘என்​-ஜென்’ (நியூ ஜெனரேஷன்) தபால் நிலை​ய​மாக மாற்​றப்​பட்​டுள்​ளது. இளம் பயனாளர்​கள் எளி​தில் அணுகும் வகை​யில் ஏ.சி. இலவச வைஃபை, புத்​தகங்​கள், பலகை விளை​யாட்​டு​கள், சார்​ஜிங் போர்ட் என பல்​வேறு வசதி​களு​டன் அமைக்​கப்​பட்​டுள்ள தபால் நிலை​யத்தை ஐஐடி...
பொங்கல் விடு​முறை முடிந்து மக்​கள் ஒரே நேரத்​தில் சென்னை திரும்​பிய​தால் பேருந்​து, ரயில் நிலை​யங்​களில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. நெடுஞ்​சாலைகளில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. பொங்கல் பண்​டிகையை கொண்​டாட சென்​னை​யில் வசிக்​கும் வெளியூரைச் சேர்ந்த மக்​கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்கு சென்​றனர். 4 நாட்​கள் பொங்கல் விடு​முறை ஞாயிற்​றுக்​கிழமை​யுடன் முடிந்​த​தால், நேற்று பள்​ளி, கல்​லூரி மற்​றும் அலு​வல​கம் செல்ல வேண்​டும் என்​ப​தற்​காக பெரும்​பாலான மக்கள் நேற்று முன்​தினம் மதியம்...
சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் வாக்காளர் பட்​டியல் சிறப்பு தீவிரத் திருத்​தத்​தின்கீழ், வாக்காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க, திருத்​து​வதற்​கான அவகாசம் ஜன.30-ம் தேதி வரை நீட்டிக்​கப்​பட்​டுள்​ளது. அதனால், வார விடு​முறை நாட்​களாக 24, 25 தேதி​களில் சென்​னை​யில் உள்ள 4,079 வாக்​குச்​சாவடி மையங்​களி​லும் வாக்காளர் பட்​டியல் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படும். இதில் வரைவு வாக்காளர் பட்​டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், 18...
இந்​தி​யா​வின் பதிப்பக தலைநக​ராக சென்னை உயர்ந்​துள்​ளது என துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார். தென்​னிந்​திய புத்தக விற்​பனை​யாளர்​கள் மற்​றும் பதிப்​பாளர்​கள் சங்​கத்​தின் (பபாசி) சார்​பில், 49-வது சென்னை புத்​தகக்காட்​சி, நந்​தனம் ஒய்​எம்​சிஏ மைதானத்​தில் ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், இந்த ஆண்​டுக்​கான பபாசி விருதுகள் வழங்​கும் விழா, புத்​தகக் காட்சி வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற துணை முதல்​வர் உதயநிதி...