Google search engine
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, புறநகரில் உள்ள துணிக் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், பெரும்பாலானோர் வரும் 10-ம் தேதி இரவே சொந்த ஊர்களுக்கு புறப்பட திட்டமிட்டிருப்பதால், நேற்றே துணிக்கடைகளுக்கு சென்று புத்தாடைகளை வாங்கத் திட்டமிட்டிருந்தனர். இதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வட சென்னையில்,...
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2024-ம் ஆண்டில் மட்டும் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், ரத்தவியல் நிபுணரும், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நிபுணருமான அருணா ராஜேந்திரன் ஆகியோர்...
தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்துக்கான குளிர்சாதன வசதி கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிக்கும் பணி ஐசிஎஃப் ஆலையில் தொடங்கியுள்ளது. உலகப்புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையான சென்னை ஐசிஎஃப் ஆலையில் வந்தே பாரத் ரயில்கள், எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகள், ஏசி மின்சார ரயில் பெட்டிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு 2 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்கவும்...
முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் அணிந்துவந்த கருப்பு துப்பட்டா அகற்றப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பன்னாட்டு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக மாணவிகள் அணிந்துவந்த கருப்பு துப்பட்டாக்களை அகற்றும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் தாங்கள் அணிந்துவந்த கருப்பு...
​தாம்​பரத்​தில் நடைமேம்​பாலப் பணி காரண​மாக, மின்சார ரயில்கள் நேற்று காலை முதல் மாலைவரை ரத்து செய்​யப்​பட்​டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்​பட்​டனர். சென்னை எழும்​பூர் - விழுப்புரம் மார்க்​கத்​தில் தாம்​பரம் யார்டில், புதிய நடைமேம்பால பணி காரண​மாக, சென்னை கடற்கரை - செங்​கல்​பட்டு வழித்​தடத்​தில் மின்சார ரயில் சேவை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரைரத்து செய்​யப்​படும் என தெற்கு ரயில்வே நேற்று முன்​தினம்...
சென்னை ரன்னர்ஸ், ஃபிரெஷ் ஒர்க்ஸ் இன்க் ஆகியவை சார்​பில் சென்னை மாரத்​தான் போட்​டி​யின் 13-வது சீசன் போட்டி நேற்று சென்னை​யில் நடத்​தப்​பட்​டது. முழு மாரத்​தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் - (32.186 கி.மீ), அரை மாரத்​தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என நான்கு பிரிவு​களில் போட்​டிகள் நடத்​தப்​பட்டன. இதில் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்கேற்​றனர். முழு மாரத்​தான் போட்​டி​யானது, நேப்​பியர் பாலத்​திலிருந்து தொடங்கி,...
ஒரே வேலை, ஒரே ஊதியம் கோட்பாட்டின்படி எய்ம்ஸ்-க்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அரசு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு உரிய உதவித்தொகை தரப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம்...
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பந்தப்பட்ட அந்த சார் யார்? என்பதை திமுக ஏன் மூடி மறைக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கார் வியாபாரிகள் சங்கத்தின் 9-ம் ஆண்டு விழா தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத் தில் நடைபெற்ற...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்​லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்​.​காதர் மொகை​தீன் ஆகியோ​ருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரி​வித்​துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்​லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்​.​காதர் மொகைதீன் ஆகியோர் நேற்று தங்களது பிறந்த நாளை கொண்​டாடினர். இதையொட்டி சமூக வலைத்​தளத்​தில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்கு...
காவலர் நலன், பொதுமக்கள் நல்லுறவை மேம்​படுத்துவது தொடர்பாக 5-வது காவல் ஆணையம் 1,200 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்​பித்​துள்ளது. காவல்​துறை​யினர், பணியிலும் பணியிடத்​தி​லும் பல்வேறு பிரச்​சினைகளை எதிர்​கொள்​கின்றனர். சிலர் பணி மற்றும் குடும்பத்தில் சமநிலையை மேற்​கொள்ள முடி​யாமல், சோர்​வடைந்து மன அழுத்​தத்​துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்ள​வும் செய்​கின்​றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்​க காவல்​துறை​யினருக்கு பல்வேறு திட்​டங்கள் கொண்டு வரப்​பட்​டுள்ளன. அதன் தொடர்ச்​சி​யாக, ‘காவலர் - பொது​மக்​களுக்கு இடையேயான உறவை மேம்​படுத்​த​வும், காவல்​துறை...