Google search engine
மருத்துவமனையில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை தொடர்ந்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “இச்சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்படும். கைதான இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதியாக வழங்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். பின்னர்...
ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து விசாரிப்பது தொடர்பாக விரைவில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதியப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், போலி என்சிசி முகாம் நடத்தியதாகக் கூறப்படும் மேலும்...
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயிரிழந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் நிறுவப்பட்ட தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியம், தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் இருந்து பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசால், ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு வழக்கறிஞர் நல நிதியத்தில் இருந்து, உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவியாக தலா...
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நவம்பர் 15 (நாளை) பவுர்ணமி, அதைத் தொடர்ந்து நவ.6, 17 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம்,ஈரோடு, திருப்பூருக்கு நவ.15, 16-ம் தேதிகளில் 705 பேருந்துகளும்,...
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் செல்ல முயன்ற அவரை பணியாளர்கள், பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை கைது செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரேமா. இவரது மகன் விக்னேஷ்...
வங்கக்கடல், அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், டெல்டா உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,...
திருக்குறளில் காணப்படும் மேலாண்மைக் கருத்துகள் குறித்த ‘யெஸ் பாஸ்’ எனும் இந்தி நூல் வெளியீட்டு விழா திருச்சி ஐஐஎம் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய மேலாண்மைக் கழக இயக்குநர் பவன் குமார் சிங் நூலை வெளியிட்டு பேசும்போது, ‘‘மேலாண்மையில் குறள்கள் பற்றிய 60 கட்டுரைகளே இவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்போது, 1,330 குறள்களையும் படித்து விட்டால் எவ்வளவு நன்மை அடையலாம் என்பது புரிகிறது’’ என்றார். முதல் பிரதியை பெற்றுக் கொண்டு,...
சென்னையில் எவ்வளவு அதிக மழை வந்தாலும், அதை சமாளிக்க மாநகராட்சி தயாராக உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த அக்.1 முதல் நவ.12-ம் தேதி வரை 43 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று 2.6...
நண்டு பிடிக்க மனைவியுடன் சென்றவர் அடையாறு ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டார். அவரை தீயணைப்பு படையினர் மற்றும் மெரினா மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் (48). இவர் அவரது மனைவி செல்வி மற்றும் மகனுடன் கடந்த 2 ஆண்டுகளாக அடையாறு பகுதியில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். வேலை இல்லாத நேரத்தில் குடும்பத்துடன் பட்டினப்பாக்கம் அருகே உள்ள அடையாறு...
சிஎம்டிஏ மூலமாக 600 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி அதிமுக சார்பில் செங்கல்பட்டு அடுத்த பதுவஞ்சேரியில் வரும் நவ.19-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் சுமார் 520 ஏக்கர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் தென் ஊராட்சியில் சுமார் 22 ஏக்கர்,...