Google search engine
சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: போகிப் பண்டிகை​யையொட்டி பயன்​பாட்டில் இல்லாத பழைய துணி, பிளாஸ்​டிக் பொருட்​கள், டயர் மற்றும் ரப்பர் டியூப் போன்ற​வற்றை எரிப்​ப​தால் காற்று மாசுபாடு ஏற்படு​வதுடன், மக்களுக்​கும் உடல்​நலம் பாதிக்​கப்​படு​கிறது. எனவே, மாநக​ராட்​சி​யின் 15 மண்டலங்​களில் இருக்​கும் அனைத்து வார்​டு​களி​லும் பொது​மக்கள் பிளாஸ்​டிக், டயர்​கள், பழைய துணிகள் போன்ற​வற்றை எரிப்பதை தவிர்க்க வேண்​டும். அதற்​குப் பதிலாக அவற்றை தனியாக சேகரித்து, மாநக​ராட்சி தூய்​மைப் பணியாளர்​களிடம் ஒப்படைக்​கு​மாறு...
சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது என்று ஆ.ராசா எம்பி பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா கம்யூனிசம் மற்றம் திராவிடக் கொள்கைகள் குறித்து பேசியதாவது: ஸ்டாலின் காலத்தில் ரஷ்யா நீர்த்துப் போனது. ஸ்டாலினுக்குப் பின்னர் குருசேவ், கோர்பசேவ் வந்தனர். பொதுவுடைமைத் தத்துவத்தால் அனைத்து மாகாணங்களையும், தேசிய இனங்களையும் ஒன்றிணைத்து பெரிய ரஷ்யாவை கட்டமைத்து, அதை வல்லரசாக உருவாக்கினார்கள்....
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் குறித்து அறிக்கை அளிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் கடந்தாண்டு ஜூலையில் படுகொலை செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல்...
வெளிமாநில அதிகாரிகளை கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது திமுகவினர் ஜனநாயகத்தை புதைகுழியில் புதைத்தனர். அப்படி இல்லாமல் இந்த முறை நியாயமாக அரசமைப்புச் சட்டப்படி தேர்தலை நடத்துவார்கள் என நம்புகிறோம். கூட்டணித் தலைவர்களிடம் பேசி இடைத்தேர்தலில் பாஜகவின் அணுகுமுறை தொடர்பாக...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவிழா களைக்கு மாறி இருக்கிறது ஈரோடு. “ஈரோடு கிழக்கில் யார் போட்டியிடுவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் முன்பே தெரிவித்துள்ளார். பெரியாரின் குடும்பம் என்ற வகையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குடும்பத்தினரை, முதல்வர் ஸ்டாலின் மிகுந்த வாஞ்சையுடன் அணுகுகிறார். திருமகன் ஈவெரா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வேட்பாளர் ஆக்கப்பட்ட...
சட்டப்பேரவையை திட்டமிட்டே ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டிய ஆளுநர், தேசிய கீதத்தை பாடவில்லை என்று கூறி வெளியேறி இருப்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழக அரசு தயாரித்துள்ள உரையை வாசிக்காமலேயே வெளியேறிவிட வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து நிறைவேற்றி காட்டியிருக்கிறார். சட்டப்பேரவையை அவமதித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின்...
தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்​.ரவி செயல்​படு​வதாக தமிழக காங்​கிரஸ் கட்சி தலைவர் செல்வப்​பெருந்தை குற்​றம்சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்பாக சட்டப்​பேர​வை​யில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்​. ரவி, தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆளுநராக இருக்​கிறார். தமிழகத்​துக்கு எதிரான நிலையை எடுக்​கிறார். இது கூட்​டாட்சி தத்து​வத்​துக்​கும், ஜனநாயகத்​துக்​கும் எதிரானது. பல்கலைக்கழகங்​களில் துணை வேந்​தர்கள் இல்லாதது தவறுகள் நடக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்​கின்றன....
சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் உண்மையில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம்: சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை, திட்டங்களே இல்லாத, உண்மைகளை மறைக்கும் உரையாக அமைந்துள்ளது. ஒருவேளை, ஆளுநர் இந்த உரையை வாசித்து இருந்தால், அதில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்ததுபோல் ஆகியிருக்கும். தமிழகம் போதைப் பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கு, கோடநாடு...
‘யார் அந்த சார்’ என்று கேட்டாலே அரசு பதறுவது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவைக்கு நேற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள், தங்களது சட்டைகளில் 'யார் அந்த சார்?' என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ்களை அணிந்திருந்தனர். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்கும் விதமாக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அதிமுகவினர் இந்த...
சட்டப்பேரவையின் இந்தாண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறினார். கடந்த 2023, 2024-ம் ஆண்டுகளில், முதல் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்த உரையில் சில தகவல்களை சேர்த்தும், சிலவற்றை தவிர்த்தும் வாசித்தார். இதையடுத்து, அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் நேற்று தொடங்கியது....