Google search engine
அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ‘‘எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லையே’’ என்று விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விக்னேஷின் தாயார் பிரேமாவுக்கு, மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் விக்னேஷ், மருத்துவர்...
சுயகட்டுப்பாடு இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது என்று மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை கூறினார். "ஆளுநரின் எண்ணித் துணிக" என்ற தலைப்பில், இளம் சாதனையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனைபுரிந்த குழந்தைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: சிறப்பு...
தமிழகத்துக்கு 4 நாள் பயணமாக 16-வது நிதி ஆணைய குழுவினர் வர உள்ள நிலையில், நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16-வது நிதி ஆணையத்தை மத்திய அரசு கடந்த டிசம்பர் 31-ம் தேதி அமைத்தது. இதில், அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியாகாந்தி கோஷ்...
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று முன்தினம் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு அந்த மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில்,...
சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனாவின் வீடுகள், கார்ப்பரேட் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று, வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள்...
திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முத்துராமன் (32). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். 2018-ல் வள்ளியூர் முப்பிடாதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு பக்தர்களை வரவேற்று திமுக சார்பில் பதாகை வைத்திருந்தார். இதற்கு தெற்கு வள்ளியூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கவேல் என்பவர் எதிர்ப்பு...
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தலைமை செயலகத்தில் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை முடக்கும் நோக்கில், மத்திய அரசின் நுகர்வோர் கூட்டுறவு அமைப்பு மூலம் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், கார்ப்பரேட்களை நெல் கொள்முதலில் களமிறக்க மறைமுக சதி நடைபெற்று...
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகர போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த அக்.4-ம் தேதி, சென்னை மாநிலக் கல்லூரி மாணவரான திருத்தணியைச் சேர்ந்த சுந்தர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு...
கோவை ஈஷா யோகா மையம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக வார இதழ் ஒன்றைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத் மகனும், கட்சியின் இளைஞரணித் தலைவருமான ஓம்கார் பாலாஜி, வார இதழ் ஆசிரியரை மிரட்டும் தொனியில் பேசியதாக திமுகவைச் சேர்ந்த அப்துல் ஜலீல் புகார் அளித்தார். இதன் பேரில் ஓம்கார் பாலாஜி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில்...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து (22). கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாகப் பணிபுரிந்து வந்த நாகமுத்து 2012-ல் தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, தனது தற்கொலைக்கு கோயில் அறங்காவலர்களாக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, லோகு, சரவணன், ஞானம், மணிமாறன், சிவக்குமார், பாண்டி ஆகிய 7 பேர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் அளித்த...