சென்னையில் 1,302 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை: ரவுடி ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு பாராட்டு
admin - 0
சென்னையில் ரவுடி ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டினார். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்தன. உச்ச கட்டமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். முதல் கட்டமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதையடுத்து, வீடு வீடாகச்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளித்துள்ளது.
இந்நிலையில், இதனையொட்டி...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டனர். 42 நாட்களாகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி, திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை வகித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: இந்த கொலைக்கு...
திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சீமான் நேற்று கூறியதாவது: பெரியாரைப் பற்றி நாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு வருகிறோம். தமிழ் மொழி, நாயன்மார்கள், ஆழ்வார்கள், பக்தி இலக்கியம், வள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள் பற்றி பெரியார் கூறிய கருத்துகளே இதற்கான ஆதாரம். அவர் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார். எந்த மொழியில்...
ஏழை குடும்பத்தில் பிறந்து, விளக்கொளியில் படித்த நாராயணன்: குமரியில் இருந்து 3-வது இஸ்ரோ தலைவர்
admin - 0
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் (60) நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி ஒருவரை எந்த உயரத்துக்கும் கொண்டுசெல்லும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது நாராயணனின் வாழ்க்கைப் பயணம்.
அன்றாட தேவைகளுக்கே சிரமப்பட்ட ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் நாராயணன். நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூர் அருகேயுள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த வன்னியபெருமாள், தங்கம்மாளின் மூத்த மகன் நாராயணன். இவருடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகள். 6...
பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்காதது ஏன் என்பது குறித்து சட்டப்பேரவையில் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “இந்தாண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும் மக்களுக்கு நிவாரணம் வழங்கியது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.2,028 கோடி செலவிடப்பட்டது. வெள்ள நிவாரணமாக...
காஞ்சிபுரம், பெரம்பலூர் உட்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
admin - 0
தமிழகத்தில் காஞ்சிபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), பிரபாகரன் (பெரம்பலூர்), பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி (கீ்ழ் பெண்ணாத்தூர்), சிவகுமார் (மயிலம்) ஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்களில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்படுகின்றன. பூந்தமல்லியை உள்ளடக்கிய திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரி இயங்குவதால், புதிய...
பொது செயலாளராக இபிஎஸ் தேர்வானது குறித்து விசாரிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
admin - 0
அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வானது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் தீர்வு காணும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த டிச.4-ம் தேதி...
துணைவேந்தர் நியமனம் தொடர்பான யுஜிசியின் வரைவு நெறிமுறைகளை மத்திய கல்வித் துறை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனி தீர்மானம், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு தேடுதல் குழு அமைப்பதில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ள...
விஜய்யை ஓரங்கட்டிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தும் புஸ்ஸி ஆனந்த்: ஆடியோ கசிந்ததால் தவெகவில் சலசலப்பு
admin - 0
நடிகர் விஜய்யை ஓரங்கட்டிவிட்டு, புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோவால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து, விஜய்யின் ஆலோசகராகவும், தவெக தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், விஜய்யின் வலதுகரமாக இருந்து வரும் தவெகவின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த்...










