இரட்டை இலை சின்னம் தொடர்பான புகாரை பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனு மீது உரிய விசாரணை...
ஸ்ரீரங்கங்கத்தைச் சேர்ந்த ஆன்மிக பேச்சாளர் ரங்கராஜன் மீது போலீஸார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ‘உண்மைக்கு புறம்பாக தன்னைப் பற்றி அவதூறாக திரித்து புனையப்பட்ட உரையாடலை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பொய்யான அவதூறு கருத்துகளை பதிவிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன்...
தமிழகத்தில் தரமற்ற துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலை முதல்வர் ஸ்டாலின் தடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளுக்கு 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயில் விநியோகிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது.
இதில் கலந்து கொண்ட நிறுவனங்களில், துவரம் பருப்புக்கு மாதிரி வழங்கிய 6 நிறுவனங்கள்...
தகவல் தொழில்நுட்பம் வாயிலாக அரசு சேவை குறித்து ஜனவரியில் விழிப்புணர்வு வாரம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
admin - 0
தகவல் தொழில்நுட்பம் வாயிலாக அரசின் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்து வகையில் வரும் ஜனவரி மாதத்தில் ஒருவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளர்.
வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு, மின்னாளுகையை படிப்படியாக அரசின் அனைத்து மட்டங்களிலும் புகுத்தி, அதன்மூலம் முழுமையான அரசாங்கத்தை எய்திடும் வகையில் ‘டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்’ தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழக அரசின் நிர்வாகத்திறன், டிஜிட்டல்...
தேனி மாவட்டம் பழனிசெட்டிப் பட்டியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜராகாததால், மதுரை போதைப் பொருள்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து போலீஸார், சென்னையில் இருந்த சவுக்கு சங்கரை இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
வீடியோ பரவல்: இதற்கிடையே தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் குறித்து அண்மையில் அவதூறாகப்...
சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவுத் திருவிழாவில் அனைத்து மாவட்டங்களின் பிரபல உணவு வகைகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நேற்று தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி...
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் பழைய அனல்மின் நிலையம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில், 3-வது யூனிட்டுக்கு நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பும் ‘பங்கர் டாப்’ எனும் நிலக்கரியை அரவைக்கு...
சளி, வைட்டமின் குறைபாட்டுக்கான 90 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
admin - 0
சளி, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி,...
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தால் 2 கோடி பேர் பயன்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
admin - 0
தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால் 2 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இயன்முறை சிகிச்சை, டயாலிஸிஸ் என்று தொற்றா நோய்களில் பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து, மருந்து வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயனடைந்தோர்...
மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்களை நியமிக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 43,131 சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சத்துணவு மையத்தில் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என 3 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது காலியாகவுள்ள மொத்த பணியிடங்களில் அவசர...










