Google search engine
‘கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை. மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற பிரபலமான கவிதை வரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடியதாக மாறியுள்ளது. இபிஎஸ்​சுக்கு நடந்த பாராட்டு விழா​வில் பங்கேற்​காத​தில் தொடங்கிய பரபரப்பு, வீட்டுக்கு போலீஸ் பாது​காப்பு போட்டதை அடுத்து இன்னும் அதிகரித்​தது. இதனைத் தொடர்ந்து அடுத்​தடுத்து செங்​கோட்​டையன் பங்கேற்ற மூன்று பொதுக்​கூட்​டங்​களில் பேசிய பேச்​சுகளை அடிப்​படையாக வைத்து, ஊடக விவாதங்கள்...
திமுக-வில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக-வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக-வில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகிய ஆகப்பெரும் ஆளுமைகள் கோவையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநரான பாபுவை கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக அறிவித்து திகைக்க வைத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாபு விஜய் ரசிகர் மன்றத்தில் சுறுசுறுப்பாக வலம் வந்தவர். அதுவே அவரை மாவட்டச் செயலாளர் அந்தஸ்துக்கு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடுவது தொடர்பாக, அரசு சார்பில் விரைவில் உயர்மட்ட ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991 - 96 காலகட்டத்தில் வருமானத்​துக்கு அதிகமாக சொத்​து கு​வித்​ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில், ஜெயலலிதா வீட்​டிலிருந்து தங்கம், வைரம், வெள்ளி...
தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் செய்யூர் - வந்தவாசி - போளூர் இடையே ரூ.1,141 கோடியில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட 109 கி.மீ. நீள சாலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக அரசு பொறுப்பேற்ற 2021 மே மாதம் முதல் தற்போது வரை, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 16,421 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2 ஆயிரத்துக்கும்...
பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்படுத்​தும் வகையில் போராட்​டத்​தில் ஈடுபட்​டதாக பதியப்​பட்ட வழக்​கில், எம்எல்ஏ எஸ்.எஸ்​.பாலாஜி உள்ளிட்​டோர் விடுதலை செய்​யப்​பட்​டனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்​தில் உச்ச நீதி​மன்றம் கொண்டு வந்த திருத்தம் பட்டியலின மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்து​வ​தால், அதை மத்திய அரசு அமல்​படுத்​தக்​கூடாது என வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு வடமாநிலங்​களில் பட்டியலின அமைப்​பினர் போராட்டம் நடத்​தினர். இதில் இறந்து போன குடும்பத்​தினருக்கு மத்திய அரசு தலா ரூ.1 கோடி வழங்க வேண்​டும்...
தமிழகத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் 26-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ், 23, 24-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ்...
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவிழிவேந்தன், தனது மனைவி ஜமுனாவை பிரசவத்துக்காக மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்திருந்தார். அங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்,...
​திரு​முல்​லை​வா​யில் பகுதி​யில் உள்ள தனியார் பள்ளியை ஒட்டி​யுள்ள தனியார் தின்னர் சேமிப்பு கிடங்​கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்​டது. திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி அருகே திரு​முல்​லை​வா​யில் சிடிஎச் சாலை அருகே தனியார் கல்வி குழும வளாகம் உள்ளது. இந்த வளாகத்​தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியை ஒட்டி​யுள்ள இடத்​தில் தனியார் நடத்​தும் ‘தின்னர்’ எனப்​படும் ரசாயன சேமிப்பு கிடங்கு செயல்​பட்டு வருகிறது. சார்லஸ் என்பவர் நடத்தி வந்த கிடங்​கில் தின்னர் சேமித்து...
2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த போலீஸ் அதிகாரிகளை நேரில் அழைத்து காவல் ஆணையர் அருண் பாராட்டினார். சென்னை கொடுங்கையூர் பகுதியில் 2014-ம் ஆண்டு தூங்கிக் கொண்டிருந்த அருண் என்ற 20 வயது இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து, இக்கொலை தொடர்பாக விஜயகுமார் என்ற 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக,...
தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, பிரதமருக்கு நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும்வரை, தமிழகத்துக்கு ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது’ என்று...