திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை கட்டுப் பாட்டிலுள்ள குகைகளை சேதப்படுத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடுகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சமணர் குகை மற்றும் குகை கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கான தற்காலிக பராமரிப்பு பணியாளரான ராஜன் என்பவர் குகை கோயில்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார்.
அப்போது, தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள குகைகளில் அடையாளம் தெரியாத சில...
எதிர்கட்சிகள் புறக்கணிப்பால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் களை இழந்து காணப்படுகிறது. நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சீமான் பரப்புரையைத் தொடங்க உள்ளதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில்,...
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட நவாஸ் கனி எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தனது கட்சியினருடன் சென்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நவாஸ் கனி எம்.பி. இந்துக்களின் புனித தலமான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி...
கொடைக்கானல் அருகே கே.சி.பட்டியில் விவசாயியிடம் மின் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்து மாறு மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொடைக்கானல் கீழ்மலைக் கிராமமான கே.சி.பட்டியில் விவசாயமே பிரதான தொழிலாகும்.
இங்குள்ள பெரும்பாலான வீடுகளுக்கு சிங்கிள் பேஸ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாவே இப்பகுதியில் உள்ள வீடுகளில் குறைந்த அளவு மின்சாரம் பயன் படுத்தினாலும், மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வருவதாக பொது...
தமிழகத்தில் மலை பிரதேசமான குன்னூரில் மிக குறைந்தபட்சமாக 8.4 டிகிரி செல்சியஸ், நில பகுதியான கரூர் பரமத்தியில் 15.5 டிகிரி செல்சியஸ் என குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னை...
2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி பணம் தொடர்பாக, கடந்த 3-ம் தேதி நடந்த அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் நேற்று ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி பணம்...
டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என டெல்லியில் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் உள்ளிட்டோர் டெல்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன்...
நேரடி நெல் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை ஆதரித்தால் தேர்தலில் திமுகவை எதிர்ப்போம்: பி.ஆர்.பாண்டியன்
admin - 0
நேரடி நெல் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கும் ஆட்சிக்கும் எதிராக விவசாயிகள் களம் காண்பார்கள் என்று தமிழ்நாடு சம்யுத்த கிசான் மோர்ச்சா மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார்.
வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்...
பால் முகவர்களிடம் மோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை: சென்னை காவல்துறைக்கு நலச்சங்கம் வேண்டுகோள்
admin - 0
சென்னையில் பால் முகவர்களை திட்டமிட்டு ஏமாற்றி, மோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தமிழக பால் முகவர்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பால் முகவர்களின் கடைகளுக்கு அதிகாலை நேரத்தில் டுவீலரில் வரும் மர்மநபர், மாநகராட்சி பணியாளர் என கூறிக் கொண்டு, உங்கள் பகுதியில் மழைநீரில்...
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டுக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தில் தமிழக அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் சென்னை கிண்டியில் நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் (கிங் இன்ஸ்டிடியூட்) செயல்பட்டு வருகிறது.
இந்த...










