Google search engine
“அவிநாசி லிங்கேஸ்வரருக்கு அடுத்து அவிநாசி தொகுதியை அதிகம் ஆள்வது அதிமுக தான்” என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அந்த அளவுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் நிரம்பிய இந்தத் தொகுதியில் 2006 தொடங்கி கடந்த நான்கு தேர்தல்களாக தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது அதிமுக. தனித் தொகுதியான அவிநாசியில் இரண்டாவது முறையாக எம்எல்​ஏ-வாக இருக்​கிறார் ப.தனபால். 2016-ல் முதல் முறையாக இங்கு வென்ற இவரை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்து அழகுபார்த்தார் ஜெயலலிதா. அப்போது,...
தமிழகத்தை ஒட்டியே இருந்தாலும் பெரும்பாலும் புதுச்சேரி மாநில அரசியலானது தமிழகத்தைவிட வித்தியாசமானது. தமிழகத்தில் திமுக, அதிமுக தான் பிரதான கட்சிகள். ஆனால், புதுச்சேரியில் காங்கிரஸ் தான் பிரதான கட்சியாக இருக்கும். இப்போது அங்கிருந்து பிரிந்த என்.ஆர்.காங்கிரசும் பிரதானமாக இருக்கிறது. திமுக-வும் அதிமுக-வும் புதுச்சேரி அரசியலில் இரண்டாம்பட்சம் தான். புதுச்சேரியில் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக தான் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் இங்கு காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து...
மூழ்கும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள். அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்றால், நன்றி மறந்த, துரோகத்தின் மறுவுருவமாக விளங்குகின்ற, ஆணவச் செருக்குடைய, பொய்மையின் மறுவடிவமாக திகழ்கின்ற நய வஞ்சகம் அகற்றப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்ற நிலை மாறி, இவையே மனித குலத்தின் வாழ் முறைகள்...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில் மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் வரை ஒரு வழித்தடமாக (4 -வது வழித்தடம்) மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை...
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு, அதன் முழுக் கொள்ளளவை நெருங்குகிறது. ஆகவே, பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் ஆந்திர மாநிலம்- கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழைக்காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் நீர் சேமித்து வைக்கப்பட்டு, தேவைக்கேற்ப இணைப்புக் கால்வாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் மற்றும்...
தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சதர்ன் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ஆர்.முனிரத்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் கடந்த 12 மாதங்களாக இயங்கவில்லை. மணல் கிடைக்காத காரணத்தால் எம்சாண்ட், ப்ளு மெட்டல் கடுமையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்,...
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை மன்னார் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டியதாக கூறி 5 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல்...
மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய ஒரு வாரத்துக்குள் டெண்டர் விடப்பட உள்ளது. வீடுகள் உள்ளிட்ட மின்இணைப்புகளில் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின்இழப்பை தடுக்கவும், மின்கணக்கீட்டில் நிகழும் முறைகேடுகளை தடுத்து வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில மின்வாரியங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், 2026-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீ்ட்டர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது....
வழக்கறிஞர்கள் சட்ட வரைவை மத்திய அரசு முழுவதுமாக திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் நேற்று கூறியுள்ளதாவது: ‘சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு’ என்றார் அண்ணா. வழக்கறிஞர்கள் (திருத்த) சட்ட வரைவு 2025 என்பது சட்டத் துறையின் சுதந்திரம் மீது தொடுக்கப்படும் நேரடி தாக்குதல் ஆகும். தேசிய ஆணையம் (NJAC) வழியாக நீதிபதி நியமனங்களை...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காண, அமைச்சர்கள் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மாநில அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கடந்த 2003 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004 ஜனவரி 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், மாநில அரசு...