உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்கும் சட்டத்திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் தாக்கல்
admin - 0
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,...
மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி அரசு என்று கூறவே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திமுக கூட்டணியை வீழ்த்தும் நோக்கில், அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஏப்.10-ம் தேதி...
பொதுமக்களின் வசதிக்காக பெயர் திருத்தம், பெயர் மாற்றத்துக்கான இணையவழி சேவை வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும். தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: பொதுமக்களிடம் இருந்து அரசிதழில் பெயர்...
தரமான கல்வியால் நாட்டை வழி நடத்தி கொண்டிருக்கிறோம்: துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் பெருமிதம்
admin - 0
தரமான கல்வியால் நாம் நாட்டை வழி நடத்தி கொண்டிருக்கிறோம் என்று துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், தலைமை செயலாளர் நா.முருகானந்தம், உயர்கல்வித்துறை செயலர் சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின்...
காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 குடும்பங்களுக்கு வக்பு வாரியம் வரி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் இறைவன்காடு ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 150 குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறி, வரி கேட்டு வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியினர்...
இந்து மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, அன்பகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்து அதிமுக சார்பில் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக...
இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் கணவர் வீட்டார்: புதுமணப் பெண் நெல்லை காவல் ஆணையரிடம் புகார்
admin - 0
இருட்டுக்கடையை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்கின்றனர் என்று புதுமணப் பெண் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். நெல்லை டவுனில் ‘இருட்டுக்கடை’ என்ற பெயரில் உலகப் பிரசித்திபெற்ற அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்பதியின் மகள் ஸ்ரீகனிஷ்கா. இவர், வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக நெல்லை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
இதுகுறித்து கவிதா ஹரிசிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எனது மகள் ஸ்ரீகனிஷ்காவுக்கும்,...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை திடீரென பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்தது. தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே வெப்பம் வாட்டத் தொடங்கியது. அவ்வப்போது வெப்பநிலை உயர்ந்தும் காணப்பட்டது. கடந்த 12-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட 9 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று காலை முதல்...
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாகக் கர்நாடகாவுக்கு தினசரி ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
டீசல் மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகளிடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால், நேற்று 2-வது...
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடதமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும்,...










