கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.27-ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு
admin - 0
அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.27-ம் தேதி பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், மார்ச் முதல் வாரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறுவரையறை செய்வது, ஆரம்ப சுகாதார நிலையமருத்துவர்களுக்கு ரூ.3 ஆயிரம் படி வழங்குவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவப் பணியிடங்கள் உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாக...
போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு மற்றும் அண்ணப்பிளவு சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உதடு மற்றும் அண்ணப்பிளவு சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உதடு மற்றும் அண்ணப்பிளவு சார்ந்த சிகிக்சைக்கு ஒருங்கிணைந்த மையம் நேற்று திறக்கப்பட்டது. ஸ்ரீராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலர் சம்யுக்தா வெங்கடாசலம் மற்றும் துணைவேந்தர் மருத்துவர் உமாசேகர் ஆகியோர் முன்னிலையில்,...
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்து இரண்டு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்த தனது கருத்துகளை தொடர்ச்சியாக தெரிவித்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில், கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்றும் காங்கிரஸில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு திமுக, அதிமுக வர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
கோவை புலியகுளம் பகுதியில், இளைஞர்கள் த.வா.க-வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெ ற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல கட்சிகள் கூட்டணி பேசிவருகின்றன. ஆனால், நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம்.
தமிழீழ மண்ணில் நடந்த இனப் படுகொலைக்காக நீதி கேட்டு...
அதிமுக இரட்டை இலை சின்னம் விவகாரம்: தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி
admin - 0
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்துவது தொடர்பாக வி. புகழேந்தி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்துவது தொடர்பாக வி. புகழேந்தி அளித்த புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2024ம் ஆண்டு...
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலி இடங்களில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, பொதுத்தேர்வு நடைபெறும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், டிஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர்கள் என மொத்தம் 1,996 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி,...
சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் சூலூர்பேட்டை யார்டில் பொறியியல் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு வரும் 19, 21 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு மேற்கண்ட நாட்களில் மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சூலூர்பேட்டை...
சென்னையில் பிப்ரவரி இறுதிக்குள் புதிதாக 245 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்: அதிகாரிகள் தகவல்
admin - 0
இம்மாத இறுதிக்குள் சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளைப் பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது.
வியாசர்பாடி பணிமனையில் இருந்து தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை, தொடர்ந்து பெரும்பாக்கம், பூந்தமல்லி ஆகிய...
‘பங்கு வேண்டும்’ என படைதிரட்டும் கட்சியின் ‘வெல்த்தான’ மாநில முக்கியஸ்தரும் அந்தக் கட்சியின் தேசிய முக்கியஸ்தரும் ஒரே சமூகத்தினர் என்பதால் பலரும் பல சந்தேகங்களைக் கிளப்புகிறார் களாம்.
சூரியக் கட்சி தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் ‘வெல்த்’ பார்ட்டி, இந்தக் கூட்டணி தொடர்ந்தால் தான் நமக்கு பல விதத்திலும் நல்லது என நினைக்கிறாராம். ஆனால், சூரியக் கட்சி செல்வாக்கை வைத்து ‘வெல்த்’ பார்ட்டி தனது வெல்த்தை பெருக்கிக் கொள்வது சொந்தக் கட்சிக்குள்...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவரும், விண்வெளி ஆணையத்தின் உறுப்பினருமான ஏ.எஸ். கிரன்குமார் பேசியதாவது: நம் நாட்டில் விண்வெளி தொழில்நுட்பத்தை ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு, வானிலை கண்காணிப்பு, திசை அறிதல், வியூகப் பயன்பாடு உட்பட்ட தேவைகளுக்கு தொடக்க காலத்தில் பயன்படுத்தினோம்.
அதனைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மூலம் பல்வேறு துறைகளுக்கு தகவல் அளித்து, பயிர் விளைச்சல், வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
அண்மைக்...









