தெருக்களுக்கு திருச்சி லோகநாதன், ‘சீர்காழி’, எம்எஸ்வி பெயர்: பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்தார்
admin - 0
பின்னணி பாடகர்கள் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பெயர்களை, அவர்கள் வசித்த தெருக்களுக்கு சூட்டி, அதன் பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழம்பெரும் பின்னணிப் பாடகரும், தமிழக அரசின் கலைமாமணி விருதும், அண்ணாவால் இசைத்தென்றல் பட்டம் பெற்றவரும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களைப் பாடியவருமான திருச்சி லோகநாதனின் கலைச்சேவையை சிறப்பிக்கும் வகையில் அவர் வசித்துவந்த மந்தைவெளிப்பாக்கம்...
மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் வரும் பிப். 20 முதல் ஏப்ரல் 5 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்து கழகம் தற்போது ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்...
தமிழகம் வளர்ச்சி மாநிலமாக தொடர துணை நிற்க வேண்டும்: ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழாவில் இளைஞர்களுக்கு முதல்வர் அழைப்பு
admin - 0
தமிழகம் வளர்ச்சி மாநிலமாக தொடர இளைஞர்கள் துணை நிற்க வேண்டும். அடுத்து அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல திட்டங்கள் வரிசை கட்ட இருக்கின்றன என்று ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில், விளையாட்டு வீரர்களுக்கான 3...
மும்பை பெண் மருத்துவருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சாதனை
admin - 0
மும்பை பெண் மருத்துவருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பார்வைத்திறனை வழங்கி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
மும்பையை சேர்ந்த 44 வயதான மகப்பேறியல் பெண் மருத்துவர் ஒருவருக்கு, கடுமையான கண் அழுத்த நோய் (குளுக்கோமா) மற்றும் தவறாகப் பொருத்தப்பட்ட செயற்கை லென்ஸ் காரணமாக 2 கண்களிலும் பார்வை முற்றிலும் பறிபோயிருந்தது.
ஏற்கெனவே பல இடங்களில் அறுவை சிகிச்சைகள் செய்தும் பலன் கிடைக்காத நிலையில், அந்த மருத்துவர் சென்னை...
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதான பார்த்திபன், சென்னையில் மின்சாதனப் பழுது நீக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு முதுகெலும்பைப் பிளப்பது போன்ற தாங்க முடியாத வலியும், கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், இதயத்திலிருந்து உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருந்தமனி வெடித்திருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், சுமார் 1.5 லிட்டர் ரத்தம் கசிந்து நுரையீரல் மற்றும்...
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் முன்விரோதத்தில் பெட்டிக்கடைக்காரரை கொலை செய்த வழக்கில் விடுவிக்கப்பட்ட, முன்னாள் பஞ்சாயத்து தலைவி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21 பேருக்கு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கிளியனூர் அருகேயுள்ள காட்ராம்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர்களான கிருஷ்ணவேணி தரப்புக்கும், வில்வமணி தரப்புக்குமிடையே தேர்தல் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்த பாஸ்கர் என்பவர், வில்வமணிக்கு ஆதரவாக...
தமிழக இடைக்கால பட்ஜெட்டை வரவேற்றும், அதிருப்தி தெரிவித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்சி ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் தலைவர் என்.கனகசபாபதி: சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினைக்கு தீர்வாகவும், நிதி ஆதாரத்தின் உயிர்நாடியாகவும் விளங்கும் TN TReDS என்ற தளத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதுவரை ரூ.5,171 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மூலம் எம்எஸ்எம்இ துறைக்கு உதவியிருப்பதை பாராட்டுகிறோம். இந்த நிதிசார்ந்த நடவடிக்கைகள்...
தமிழக அரசு துறைகளுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை டிஎன்பிஎஸ்சி எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2 மெயின் தேர்வுகள் கடந்த 8-ம் தேதி காலையும், பிற்பகலும் நடைபெறுவதாக இருந்தன.
ஆனால், அன்று காலையில் சென்னையில் 3 தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு இடங்கள் ஒதுக்குவதில்...
புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தவெகவில் இணைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நம்பம்பட்டியைச் சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன் (57).
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான இவர் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு அளித்திருந்தார். நேர்காண லிலும் பங்கேற்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிமுகவில் இருந்து விலகி, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: எம்ஜிஆர்,...
கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் 45 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்: 44 ரயில் சேவைகள் ரத்து
admin - 0
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில்களின் சேவையில் கடந்த 5-ம் தேதி முதல் வரும் ஏப்.5-ம் தேதி வரை 45 நாட்களுக்கு சுமார் 44 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று கூறியதாவது: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக,...










